என் உயிரினும் மேலான - நெடுந்தொடர் - - - பாகம் 18
குழந்தை உலகிலேயே அழகான பெண்ணின் பெயரை தாங்கிக்கொண்டதாக பிரவீன் மனதில் நினைத்துக்கொண்டான்.ப்ரவீனுக்கு விஜியின் மேல் இருப்பது என்ன? ஈர்ப்பா, காதலா, நட்பா, அரவணைப்பா, பொசெசிவ்னெஸ்ஸா.....புரியாத புதிர். ஒன்று மட்டும் நிதர்சனம்......என்ன காரணமாயினும் இருக்கட்டும், விஜி அவன் மனதை ஆட்கொண்டுவிட்டாள் என்பது உண்மை. அனால் அது என்ன உறவு....என்பதை அவனாக அறிந்துகொள்ளும் வரையில் ஆண்களுக்கே உரிய மனப்போராட்டம் அவனுள் நடந்து தான் ஆகவேண்டும்.அவள் மிகவும் நெருக்கமானதாக உணரும் அவனுக்கு அவளிடம் முன்பு பேசியதை போல் சாதாரணமாக பேச முடியாமல் போய்விடுமோ, அப்படியே சாதாரணமாக பேசத்தொடங்கினாலும் என்றாவது இந்த இனம் புரியாத ஈர்ப்பை உளறிவிட்டால்.....அவள் என்ன நினைத்துவிடுவாள்...என்றல்லாம் அவன் மனம் போராட்டத்தை நடத்திக்கொண்டிருந்தபோது, பின்னால் இருந்து யாரோ வருடி கூப்பிடுவதாய் உணர்ந்தான் பிரவீன்.
"என்ன பிரவீன், சாப்பிடாம இங்க உக்காந்து இருக்கீங்க" என்றபடி பின்னால் நின்றிருந்த ரம்யா கேட்க,
"இல்ல, நான் இரவு நேரத்துல ஓட்டல் சாப்பாடு சாப்பிடறது இல்ல" என்றான் பிரவீன்.
"ஹலோ, நைட் ல சாப்பிடலன்னா அல்சர் தான் வரும்" என்றாள் விஜி.
"நான் பயோகெமிஸ்ட்ரி தாங்க படிச்சிருக்கேன், எனக்கும் தெரியும், ஆனா, நைட் ல நான் ஓட்டல் சாப்பாடு சாப்பிடமாட்டேன் னு எல்லாருக்கும் தெரியும், அதான் எனக்கு ரியாஸ் வீட்ல இருந்து சாப்பாடு எடுத்துட்டு வர போயிருக்கான் ரியாஸோட தம்பி" என்றான் பிரவீன்.
"இதெல்லாம் கொஞ்சம் ஓவர்" என்றாள் காயத்ரி.
"ஷு" என்று அவளை பேசவேண்டாம் என்று கூறினாள் விஜி.
"இல்ல. பரவால்ல, கொஞ்சம் ஓவர் தான் இது...நானும் ஒத்துக்கறேன்" என்றான் பிரவீன் சிரித்துக்கொண்டே.
சற்று நேரத்தில் ஷாகுல் சாப்பாட்டுடன் வர...."போங்க சார், போங்க, ஸ்பெஷல் சாப்பாடு வந்திருக்கு" என்று நக்கலாக கூறினாள் விஜி.
"என்னங்க....கிண்டல் பண்றீங்க" என்றான் பிரவீன்.
"ஓஹோ, நான் பண்றது கிண்டலா?நீங்க பண்றது....?" என்றாள் விஜி.
கலகலப்பாக நிமிடங்கள் நகர்ந்தன.
விஜியும் ரம்யாவும் காயத்ரியும் கிளம்பும் நேரம் வந்தது.
யாரோ ஒரு நெருங்கிய சொந்தம், இதயத்தை ஆட்கொண்டிருக்கும் ஒரு தேவதை கிளம்புவதாகவே தோன்றியது ப்ரவீனுக்கு.
விஜியின் மனத்திலும் அதேபோன்ற நினைவே இருந்தாலும் இருவரும் வெளிக்காட்டிக்கொள்ளாமல் நன்றாக நடித்தனர்.
பிரவீன் புரிந்துகொண்டுவிட கூடாது என்பதில் விஜியும் விஜி புரிந்துகொண்டுவிட கூடாது என்பதில் ப்ரவீனும் தெளிவாய் இருந்தனர்.
இந்த ஈர்ப்பு என்னவென்று தெரியாமலும் அதை வெளிப்படுத்த முடியாமலும் அவர்கள் படும் தவிப்பும் அதை வெளிக்காட்டிக்கொள்ளாமல் அவர்கள் முகத்தின் மாற்றங்களும்....அப்பப்பா....என்ன ஒரு அழகு அந்த முகங்களில்....
"சரி பிரவீன் நாங்க கெளம்பறோம், ரொம்ப லேட்டா ஆயிருச்சு, நாங்க பதினோரு மணிக்குள்ள கோலியனுர் கூட்ரோடுக்கு போய்டணும், இல்லன்னா வளவனூர்க்கு பஸ் இருக்காது." என்றாள் விஜி.
"ஒ, அப்டியா, ஒரு நிமிஷம் இருங்க, " என்றபடி "டேய் முபாரக், நர்கீஸ் எப்படி போறாங்க டா, விஜி கெளம்புறாங்களாம், பஸ் ஸ்டாண்ட் ல டிராப் பண்ணனும்" என்றான் பிரவீன் முபாரக்கிடம்.
"இல்ல டா, நர்கீஸ் இங்க ரகு வீட்ல அவனோட சிஸ்டேர்ஸ் கூட தங்கிடுறாளாம், ஆல்ரெடி வீட்ல பிரென்ட் வீட்ல தங்கிக்கறதா பர்மிஷன் வாங்கிட்டாளாம், ஒன்லி இவங்க தான் ரிட்டர்ன்:"என்றான் முபாரக்.
"ஓ ஓகே ஓகே, நான் போய் இவங்கள பஸ் ஸ்டான்ட் ல விட்டுட்டு வரேன், நீ கார் கீ குடு" என்றான் பிரவீன்.
"லூசா டா நீ, மணி இப்பவே நைன் தர்ட்டி ஆகுது, நீ இவங்கள பஸ் ஸ்டான்ட்ல விட்டுட்டு வந்தா ஒரே ஒரு பஸ் தான் இருக்கு, விஜயகணபதி, அதும் நேர்வழி இல்ல. பண்ருட்டி வழி" என்றபடி விஜியை பார்த்து "எம்மா, நீங்க நைட் இங்கயே ஸ்டே பண்ணிட்டு ஏர்லி மார்னிங் பர்ஸ்ட் பஸ் ல போய்ட கூடாதா" என்றான் முபாரக்.
"இல்லேண்ணா, அம்மா கோச்சுக்குவாங்க, அப்புறம் எந்த அகேஷன்க்கும் பர்மிஷன் தர மாட்டாங்க, அப்புறம் உங்கள எல்லாம் மீட் பண்ணவே முடியாது" என்றாள் ரம்யா.
"ஓ அப்படியாம்மா, இந்த டைம் ல நீங்க பஸ் ல போறதும் அவ்ளோ நல்லா இல்ல, எங்களுக்கும் சங்கடமா இருக்கும்,....ஒண்ணு பண்ணுங்க, " என்றபடி, "டேய் பிரவீன், நீ என்ன பண்ற, வாப்பா கிட்ட சொல்லிட்டு கார எடுத்துக்கோ, அவங்கள அவங்க வீட்ல டிராப் பண்ணிட்டு வா, அதான் நல்லது, நம்மள நம்பி வந்திருக்காங்க. நம்ம இன்வைட் பண்ணதுக்கு நாம தான் அவங்கள கேர் எடுத்து பாத்துக்கணும், அவங்க சேப் ரொம்ப முக்கியம், நீ போறியா...இல்லன்னா விஜய் ரியாஸ் யாரையாவது அனுப்பவா" என்றான் முபாரக்.
விஜியின் மனதோ....."நீ வா பிரவீன்" என்று நினைத்தது.
"நான் போறேன் டா" என்றான் பிரவீன்.
விஜியின் மனம் துள்ளியது.
சற்று நேரத்தில் கார் சாவியோடு வந்தான் பிரவீன். "போகலாமா விஜி" என்றான்.
"ம்ம்ம், போலாம் பிரவீன்" என்றபடி காரை நோக்கி நடந்தனர் நால்வரும்.
"பிரவீன், நீங்க எப்போ கார் ஓட்ட கத்துக்கிட்டிங்க" என்றாள் ரம்யா.
"ஒரு வருஷம் ஆச்சு லைசன்ஸ் எடுத்து" என்றான் பிரவீன்.
"நீங்க ஆனா நல்ல ட்ரைவ் பண்றீங்க, லாஸ்ட் டைம் எங்களை கடலூர் ல டிராப் பண்ணும்போது ரொம்ப கேர்புல்லா ஆனா நல்ல ஸ்பீடா போனீங்க" என்றாள் ரம்யா.
"தேங்க்ஸ் பார் யுவர் காம்ப்ளிமெண்ட்ஸ்" என்றான் பிரவீன்.
"என்ன விஜி, சைலண்டா வரீங்க" என்றபடி காரின் முன் கதவை திறந்தான் பிரவீன்.ஆனால் ரம்யா முன்னால் அமர்ந்துவிட ப்ரவீனுக்கோ மிகவும் சங்கடமாய் இருந்தது.
விஜி இதை சற்றும் எதிர்பார்க்கவில்லை.
அரை மனதுடன் ஓட்டுநர் இருக்கைக்கு பின்னால் விஜி அமர, கார் மெல்லமாய் நகரத்தொடங்கியது.
ஐந்தாறு நிமிடங்களுக்கு மௌனமே நிலவியது.
ரம்யா தொடங்கினாள்,"ஏதாவது பேசுங்கப்பா, ட்ரைவர் தூங்கிட போறாரு" என்றாள் நக்கலாக.
"ரம்மி, சும்மா இரு," என்றாள் விஜி.
"இல்ல அக்கா, போர் அடிக்குது இல்ல" என்றாள் ரம்யா.
"பிரவீன் அண்ணா, நீங்க பெரிய கிரிக்கெட் பிளேயர் னு முபாரக் அண்ணா சொன்னாரு, எவ்ளோ வருஷமா வெளாடுறீங்க அண்ணா" என்றாள் காயத்ரி.
"நான் பத்து வருஷமா வெளயாடுறேன், கிரிக்கெட் என் உயிர், ஏன்னா என்னோட உயிருக்கு உயிரான என் பிரெண்ட்ஸை எனக்கு குடுத்தது இந்த கிரிக்கெட்டும் இந்த கிரௌண்டும் தான்.என் உயிரை குடுக்க சொன்னாலும் குடுப்பேன், ஆனால் இந்த கிரிக்கெட்டையும் என் பிரெண்ட்ஸையும் விட்டு கொடுக்கவே மாட்டேன். என்னால முடிஞ்ச வரைக்கும் என் டீம் ஜெயிக்க உயிரை குடுத்து விளையாடுவேன்." என்றான் பிரவீன்.
"ஆப்டெரால் லோக்கல் மேட்ச் கு இவ்ளோ பில்டப்பா?" என்றாள் காயத்ரி.
"லோக்கல் மேட்ச் இன்டெர்னஷனல் எல்லாம் நாம நெனைக்கறதுல தான் இருக்கு" என்றான் பிரவீன்.
"ஓஹோ, உங்க மேட்ச் இந்தியா பாகிஸ்தான் மேட்ச் போல த்ரில்லிங்கா இருக்குமா?" என்றாள் ரம்யா.
"அதை நான் சொல்றதைவிட நீங்களா பாருங்க. கமிங் சண்டே உங்க விழுப்புரம் காஸ்மாபாலிடன் ல உங்க டிஸ்டிக்ட்க்கும் எங்க டீம் க்கும் மேட்ச் இருக்கு, வந்து பாத்துட்டு சொல்லுங்க" என்றான் பிரவீன்.
"அப்டியா, வரமாட்டோம் னு பீட்டர் விடறீங்க, கண்டிப்பா வந்து பாப்போம் எப்படி வெளாடுறீங்கன்னு" என்றாள் ரம்யா.
"கண்டிப்பா, யு ஆர் மோஸ்ட் வெல்கம்" என்றான் பிரவீன்.
"விஜி....போய் பாக்கலாமா" என்றாள் காயத்ரி.
"பாக்கலாம், பட் நாட் கன்பார்ம்" என்றாள் விஜி.
"அப்டின்னா கண்டிப்பா அது ஓகே னு தான் அர்த்தம்" என்றாள் ரம்யா.
"எப்படி சொல்ற" என்றாள் காயத்ரி.
"விஜி எப்பவுமே பாக்கலாம் பட் நாட் கன்பார்ம் னு சொன்னா அது கன்பார்ம் ஆய்டும் னு அர்த்தம். என் அக்காவை பத்தி எனக்கு தெரியாதா" என்றாள் ரம்யா.
"ஓஹ், இது விஜியோட கோட் லாங்வஜ் ஆஹ்?" என்றான் பிரவீன்.
"அப்படி எல்லாம் ஒன்னும் இல்ல, இவ சும்மா ஏத்தி விடறா" என்றாள் விஜி.
"பிரவீன்...நீங்க சொல்லுங்க உங்கள பத்தி, உங்க ஸ்டோரி இன்ட்ரெஸ்ட்டா இருக்கு" என்றாள் காயத்ரி.
"என்னங்க இன்டெரெஸ்ட்....நான் ஒரு யாரும் இல்லாத அனாதை ஆயிட்டேன், எல்லாமே எனக்கு என்னோட பிரெண்ட்ஸ் தான், இப்போ நீங்க கெடச்சுருக்கீங்க, பட் நீங்க எவ்ளோ நாள் உறவுன்னு தெரியாது" என்றான் பிரவீன்.
"கண்டிப்பா நாங்க லைஃப் லாங் உங்ககூட இருப்போம் பிரவீன்" என்றாள் ரம்யா.
"நீங்க சொன்னதே மனசுக்கு சந்தோஷமா இருக்கு ரம்யா" என்றான் பிரவீன்.
"பிரவீன், நீங்க ஏன் இப்டி ஒரு செண்டிமெண்ட் பாண்டேடா இருக்கீங்க, நீங்க நார்மலா இல்லையே, சென்டிமென்ட்ஸ் அடிக்டட் ஆஹ் இருக்கீங்க" என்றாள் காயத்ரி.
"அப்டியா காயத்ரி, உங்க வீட்ல நீங்க எத்தனை பேர்" என்றான் பிரவீன்.
"நான், அப்பா, அம்மா, தம்பி, பாட்டி அஞ்சு பேர்" என்றாள் காயத்ரி.
"லீவு நாட்கள் ல என்ன பண்ணுவீங்க" என்று கேட்டான் பிரவீன்.
"சென்னை ல மாமா வீடு இருக்கு அங்க போவோம், மதுரை ல சித்தப்பா இருக்காரு, அங்க கூட போவோம், இல்லன்னா பெங்களூருல அத்தை வீட்டுக்கு போவோம்" என்றாள் காயத்ரி.
"சோ, உங்கள சுத்தி நெறையா சொந்த காரங்க இருக்காங்க இல்ல" என்றான் பிரவீன்.
"ஆமாம்" என்றாள் காயத்ரி.
"எனக்கு என் அம்மா என் தங்கை ரெண்டு பேர தவற யாரும் இல்ல, எங்க அப்பா லவ் பண்ணி எங்க அம்மாவை கல்யாணம் பண்ணிக்கிட்டாரு, ரெண்டு ஸைட்லயும் ஒத்துக்கல. எங்க அப்பா தனியா வந்து கஷ்டப்பட்டு எங்களை வளத்தாரு. எனக்கு ஏழு வயசு ஆனப்போ என் அப்பா எதிர்பாராத விதமா எங்க அப்பா தூங்கினவரு எழுந்திருக்கவே இல்ல. அப்போலேந்து எங்க ரெண்டு பேரையும் எங்க அம்மா தான் வளத்தாங்க, என்ன கஷ்டம் இருந்தாலும் எங்ககிட்ட அதை காட்டிக்கிட்டது இல்ல, அவங்களும் இப்போ இல்ல, என் தங்கை.....இன்னும் வாழ்க்கைன்னா என்னன்னே தெரியாத பிஞ்சு அவ, அவளும் இல்ல, இப்டி ஒரு சூழ்நிலைல இருந்த ஒருத்தன் பாசத்துக்காக எவ்ளோ ஏங்கிருப்பான் னு நெனச்சு பாருங்க, " என்றான் பிரவீன்.
அவன் கண்கள் கலங்கியதை ரியர் வியூ மிரர் மூலமாக பார்த்த விஜி, மெல்ல அவனது தோளினை தொட்டு அழுத்த, கண்ணாடி மூலமாக அவளை எட்டி பார்த்தான் பிரவீன்.
விஜியும் கண்ணாடியில் பிரவீன் பார்ப்பதை பார்த்து கண்களை மெல்ல மூடி திறந்து தலையை ஆட்டினாள். அதற்கான அர்த்தம் "நீ கவலை படாதே, நான் இருக்கிறேன்" என்பதாகவே உணர்ந்தான் பிரவீன்.
அவள் தோளில் கை வைத்த கணம், உலகமே அவனுக்கு துணையாக இருப்பதாக உணர்ந்தான் பிரவீன். காதலின் விளையாட்டை என்னவென்று சொல்வது.மட்டற்ற மகிழ்ச்சியில் திளைத்தது பிரவீனின் மனம்.
"சாரி பிரவீன், தப்பான கேள்வி கேட்டுட்டேன், " வருத்தப்பட்டாள் காயத்ரி.
"பரவால்ல, நீங்களும் புரிஞ்சுக்கணும் இல்ல" என்றான் பிரவீன்.
"கண்டிப்பா, இனிமே உங்கள ஹர்ட் பண்றமாதிரி ஏதும் கேட்கமாட்டேன்" என்றாள் காயத்ரி.
"பரவால்ல காயத்ரி, நீங்களும் எனக்கு ஒரு நல்ல பிரென்ட் தான், நீங்க என்ன சொன்னாலும் நான் தப்ப நெனைக்க மாட்டேன், " என்றான் பிரவீன்.
"சரி, பிரவீன், ஒரு சின்ன ஹெல்ப். நெல்லிக்குப்பம் எ.எம்.எம். ஹாஸ்பிடல் தாண்டி அந்த இந்தியன் ஆயில் பெட்ரோல் பங்க் ல கொஞ்சம் ஸ்டாப் பண்ணுங்க" என்றாள் ரம்யா.
"எதுக்கு, அதான் பெட்ரோல் இருக்கே," என்றான் பிரவீன்.
"இது பெட்ரோல் க்கு இல்ல, நேச்சர் ஸ் கால்" என்றாள் ரம்யா.
"ஓ, ரியலி சாரி, லேடிஸ் இருக்கீங்க, இதை நான் யோசிக்கவே இல்ல" என்றபடி அந்த பெட்ரோல் பங்கில் வண்டியை நிறுத்தினான் பிரவீன்.
ரம்யாவும் காயத்ரியும் சென்றுவிட, "விஜி, நீங்க போகலையா" என்றான் பிரவீன்.
"இல்ல, வேணாம்" என்றபடி முன்னாள் வந்து அமர்ந்தாள் விஜி.
"காயத்ரி அப்படி கேட்டு உங்க ஹர்ட் பண்ணதுக்கு நான் மன்னிப்பு கேட்டுக்கறேன்" என்றாள் விஜி.
"ஐயோ, பரவால்ல விஜி, அவங்களுக்கு அந்த மாதிரி சர்கம்ஸ்டன்ஸ் எல்லாம் தெரியாது இல்ல அதான்.நான் பெருசா எடுத்துக்கல" என்றான் பிரவீன். வாய் கூறினாலும் கண்கள் கலங்கின ப்ரவீனுக்கு.
"ஐயோ, பிரவீன், அழாதீங்க, எனக்கு ஒரு மாதிரி இருக்கு, ச்ச, ஏன் தான் காயத்ரியை கூட்டிட்டு வந்தேனோ?" அலுத்துக்கொண்டாள் விஜி.
"இல்ல விஜி, பரவால்ல, இது எனக்கு புதுசு இல்ல" என்றான் பிரவீன்.
கலங்கிய அவன் கண்களை, தன கைக்குட்டையால் துடைத்தாள் விஜி.
பிரவீனின் கையை பிடித்தபடி, "இனிமே இந்த மாதிரி சென்டிமெண்டா நீங்க பீல் பண்ணக்கூடாது, எந்த ப்ராபளம் இருந்தாலும் எனக்கு கால் பண்ணி ஷேர் பண்ணுங்க, ஐ வில் பி தேர் வித் யு இந்த ஆல் தி சர்கம்ஸ்டன்சஸ்" என்றால் விஜி.
ப்ரவீனுக்கு சந்தோஷத்தில் ஒன்றும் புரியவில்லை.
தூரத்தில் காயத்ரியும் ரம்யாவும் வரவே, பின்னால் சென்று முன்பு அமர்ந்திருந்த இடத்திலேயே அமர்ந்தாள்.
கார் விழுப்புரம் மெய்ன் ரோட்டில் சீரான வேகத்தில் நகரத்தொடங்கியது.
பாகம் 18 முடிந்தது.
-------தொடரும்-------------