என் உயிரினும் மேலான - நெடுந்தொடர் - - - பாகம் 19

ரம்யா உறங்கத்தொடங்கி இருந்தாள். "ஏய், ரம்மி, தூங்கினா பின்னாடி வந்து தூங்கு டி, ஓட்டறவங்களுக்கும் தூக்கம் வரும் இல்லன்னா" என்றாள் விஜி.

"ம்ம், சரி, நீ முன்னாடி வந்து உக்காரு, பிரவீன், கொஞ்சம் ஸ்டாப் பண்ணுங்க" என்றாள் ரம்யா.

ஆள் மாறாட்டம் (!!!) நடந்தது.

இருவரின் முகத்திலும் ஒரு ஒளி.

"இன்னும் தர்டி மினிட்ஸ்ல வளவனூர் வந்துருவோம்" என்றான் பிரவீன்.

"ஆமாம், ட்ராபிக் வேற இல்ல, நீங்களும் கான்ஸ்டண்டா 100 ல போறீங்க" என்றாள் விஜி.

"காயு.....தூங்கறியா டி" என்று காயத்ரியை விஜி கேட்க, "இல்ல விஜி, ஜஸ்ட் திங்கிங்" என்றாள் காயத்ரி.

"என்ன டி திங்கிங்" என்றாள் விஜி.

"இல்ல, போடுவா பாய்ஸ் எல்லாரும் எப்படி இருப்பாங்க, எப்படி பிஹேவ் பண்ணுவாங்க, அவங்களோட மெண்டாலிட்டி எப்படி இருக்கும்...இது எல்லாத்தயும் நான் எப்படி எல்லாம் நெனச்சிருந்தேனோ அத்தனையும் இன்னிக்கு ஒரே ஈவினிங்க்ல மாறிடுச்சு டி" என்றாள் காயத்ரி.

"என்னடி ஆச்சு உனக்கு" என்றாள் விஜி.

"இல்ல விஜி, நல்லா பாரு, ஒருத்தங்களுக்கு ஒருத்தங்க விட்டு கொடுக்காத பிரெண்ட்ஸ், ஒருத்தவங்களுக்கு ஒண்ணுன்னா எல்லாரும் ஒண்ணா சேந்து அந்த சுகதுக்கத்துல பங்கு எடுத்துக்கறது, காசு பணம் பாக்காம பெரியவங்க சின்னவங்க பாக்காம, காஸ்ட் சிஸ்டம் பாக்காம, ஸ்டேட்டஸ் பாக்காம......என்ன ஒரு டீம் டி. எப்படி ஒருத்தவங்க ஒருத்தவங்க புரிஞ்சு நடக்குறாங்க இல்ல, முபாரக் அண்ணா பாரு, கார குடுத்து நம்மள கொண்டு விட்டுட்டு வர சொல்றாரு, ரியாஸ் அண்ணா, ப்ரவீனுக்கு வீட்ல இருந்த சாப்பாடு தறாரு, லெனின் அண்ணா...எவ்ளோ இம்போர்ட்டன்ஸ் குடுக்கறாரு, முபாரக் அண்ணா உட் பி எவ்ளோ தைரியமா நைட் ரகு அண்ணா வீட்ல தாங்கறாங்க, அவங்க வீட்ல எவ்ளோ நம்பிக்கை, முபாரக் அண்ணா எவ்ளோ நம்பிக்கை பிரென்ட் மேல வெச்சுருக்காரு, ஆர்பன்ஸ் தான் பட் அந்த ரெண்டு மெக்கானிக் அண்ணாவை தன்னோட குடும்பமா பாக்கறீங்க....இதுல யாரோட பிரெண்ட்ஷிப் பெஸ்ட் யாரு நெறய விட்டு கொடுக்கறாங்க.......நம்மளால கெஸ் பண்ணக்கூட முடியாது டி, ஒருத்தவங்களுக்கு ஒருத்தவங்க சளைக்காம எவ்ளோ அன்ப கொட்றாங்க, எனக்கு பொறாமையா இருக்கு" என்றாள் காயத்ரி.

மனமார பேசும் காயத்ரிக்கு "ரொம்ப நன்றி காயத்ரி" என்று பதில் அளித்தான் பிரவீன்.

"கண்டிப்பா, இவ்ளோ ஏன், நான் தான் உன்கிட்ட சொன்னேனே, பிரவீன் டிக்கெட் தர வரும்போது அவன் கோவத்தை பாக்கணுமே, பட் அன்னிக்கு ஆப்டர்நூன் அதா எல்லாம் மறந்துட்டு எவ்ளோ சோசியலா வந்தாரு தெரியுமா" என்றாள் விஜி.

"ஓ, எண்ணப்பத்தி காயத்ரி கிட்ட சொல்லியாச்சா" என்றான் பிரவீன்.

"சொல்லியாச்சா வா, அடடடடா....உங்க புராணம் தான் ரெண்டு வாரமா, பிரவீண் னு ஒரு பிரெண்ட மீட் பண்ணேன், அப்படி இப்படி, எங்க உயிரை காப்பாத்தினது அவன் தான்...சாரி....அவரு தான் அது இதுன்னு உங்கள பாக்கறதுக்கு முன்னாடியே நீங்க இப்படி தான் இருப்பீங்கன்ற வரைக்கும் எல்லாத்தயும் ஒப்பிச்சுட்டா" என்றாள் காயத்ரி.

"விஜி என்ன அவ்ளோ சொல்லிருக்கீங்க, துணிக்கடைல என்கிட்டே கோவமா பேசினதை சொல்லவே இல்லையா" என்றான் பிரவீன்.

"ம்ம்ம், சொன்னா சொன்னா, பட் ரொம்ப பீல் பண்ணா, " என்றாள் காயத்ரி.

"விஜி, ஏன் நீங்க சைலண்ட்டாவே வரீங்க, உங்கள பத்தி சொல்லுங்க, நானும் கேட்டுட்டேன், நீங்க உங்களப்பத்தி சொல்லவே மாற்றிங்க" என்றான் பிரவீன்.

"என்னைப்பத்தி என்ன சொல்றது பிரவீன், வீட்டுக்கு மூத்த பொண்ணு, இவை என் தங்கச்சி ரம்யா, இவைதான் என் உயிர், என் செல்லம், பாவம், ரொம்ப இளகிய மனசு இவளுக்கு, யாரையும் ஹார்டா பேசமாட்டா, என்ன இருந்தாலும் என்கிட்டே ஷேர் பண்ணிக்குவா, என் கிட்ட தான் எதுவா இருந்தாலும் டெசிஷன் கேப்பா, நான் ஓகே னா ஓகே, இல்லன்னா இல்ல னு விட்டுட்டு போற டைப். என்மேல முழு நம்பிக்கை வெச்சுருக்கா, நானும் அப்படி தான், சின்ன பொண்ணு, சோ நெறய விஷயம் இவகிட்ட ஷேர் பண்ணிக்க முடியாது, நான் என் பெஸ்ட் பிரென்ட் காயத்ரி கிட்ட தான் எல்லாத்தையும் ஷேர் பண்ணிக்குவேன், பட் ரம்யாவுக்காக ஏதும் செய்வேன். அவ என்மேல எவ்ளோ உண்மையா இருக்காளோ அதைவிட பத்து மடங்கு நான் இருப்பேன். அவளுக்காக ஏதும் செய்வேன். நீங்க எப்படி உங்க பிரெண்ட்ஸ்க்கு உயிரையே தருவேன் னு சொன்னீங்களோ அதே போல தான் என் தங்கைக்காக உயிரையே தருவேன், ஆனா ஒரு சின்ன விஷயம் என்கிட்டே எனக்கே பிடிக்காதது, ரொம்ப கோவப்படுவேன், பயங்கர ஷாட் டெம்பர், ஆனா ரம்மி ரொம்ப சாப்ட். நான் ஒன்ஸ் முடிவு பண்ணிட்டா அவ்ளோதான், பயங்கர அடமென்ட். " என்றாள் விஜி.

"இல்லையே...உங்கள பாத்தா அமைதியின் சொரூபமா இருக்கீங்க" என்றான் பிரவீன்.

"ஹலோ, ரொம்ப ஐஸ் வெக்காதிங்க, இவ அமைதியின் சொரூபமா இருக்காளா? பத்ரகாளி" என்றாள் காயத்ரி.

"ம்ம்ம், காயத்ரி, உங்க காண்டாக்ட் நம்பரை தரவே இல்ல" என்றான் பிரவீன்.

"ஹலோ, அவளோட காண்டாக்ட் நம்பர் உங்களுக்கு எதுக்கு" என்றாள் விஜி.

"சும்மா தான் க, இன் கேஸ் உங்க லைன் கெடக்கிலேன்னா, இன்பார்மேஷன் காயத்ரிக்கு சொல்லலாம் இல்ல" என்றான் பிரவீன்.

"அதெல்லாம் வேணாம், எனக்கு மெசேஜ் அனுப்புனங்க, நான் பாப்பேன்" என்றாள் விஜி.

"அடடடா, என்னங்க இப்படி அடம் புடிக்கறீங்க" என்றான் பிரவீன்.

"ஏய் விஜி, விடு, பரவால்ல, நீங்க ஸ்டோர் பண்ணிக்கோங்க. 9894445365 "என்றாள் காயத்ரி.

"ஓ, 9894445365 " ஓகே ஓகே" என்றான் பிரவீன்.

"ஸ்டோர் பண்ணிக்கல?" என்றாள் விஜி.

"என்னோட மெமரி பத்தி தெரியாதே உங்களுக்கு, என் போன் புக் ல எவ்ளோ நம்பர் இருக்கோ அத்தனையும் மனப்பாடமா தெரியும். தலைகீழா சொல்லுவேன்" என்றான் பிரவீன்.

"ஓ அப்டியா" ஆச்சர்யமாக சொன்னாள் விஜி.

"இவ்ளோ ஏன், நான் யாரார என்ன தேதி ல எங்கெங்கே பாத்தேன், அன்னிக்கு அவங்க என்ன டிரஸ் போட்ருந்தாங்க, எந்த தேதி ல நான் என்ன சாப்பிட்டேன்" எல்லாம் மனப்பாடமா தெரியும்." என்றான் பிரவீன்.

"ஹலோ, சும்மா அடிச்சு விடாதீங்க" என்றாள் விஜி.

"ப்ராமிஸ்..வேணும்னா செக் பண்ணுங்க" என்றான் பிரவீன்.

"ஓ அப்டியா, உங்கள எங்க அப்பா மடக்கி டிக்கெட் வாங்க சொன்னாரு ன்னு சொன்னீங்களே, எங்க அப்பா நேம் டேக் ல என்ன பேரு போட்ருந்துச்சு" என்றாள் விஜி.

"கஷ்டமான கேள்வியை இருக்கும் னு பாத்தா ரஷ்ய இருக்கு...என்றபடி, உங்க அப்பா பேரு சேகரன், அவரோட இனிஷியல் ஆர். அவரோட யூனிபார்ம்ல நாலாவது பட்டன் மட்டும் லைட் ப்ரவுன் ல மாத்தி தேச்சுருக்காரு, உங்க அப்பாவோட பேரு உங்க வீட்டு பெயர் பலகைல கூட இருக்கு. ஆர். சேகரன் னு.ஆனா உங்க வீட்டுக்கு விஜயலக்ஷ்மி இல்லம் னு உங்க பேரு வெச்சுருக்காரு, உங்க அப்பா தண்ணி அடிப்பாரு, அன்னிக்கு என்னை டிக்கெட் வாங்க சொல்லும்போது கூட அடிச்சிருந்தாரு, அன்னிக்கு அவரு அடிச்ச சரக்கு வோட்கா" என்றான் பிரவீன்.

"அப்பா, எல்லாம் சரி, அது இருக்கட்டும், எங்க அப்பா அன்னிக்கு ஏதோ.....அது என்ன சொன்னீங்க.....ம்ம்ம், வோட்கா.அது எப்படி உங்களுக்கு தெரியும், நீங்களும் தண்ணி அடிப்பீங்களா" என்றாள் விஜி.

"ஐயோ, நானா, நான் பெப்சி கோக் கூட குடிக்க மாட்டேன்....அப்புறம் எப்படி தெரியும் னு தான கேக்கறீங்க, வெற்றி அண்ட் கதிர் குடிப்பாங்க, அந்த ஸ்மெல் வெச்சு சொன்னேன்" என்றான் பிரவீன்.

"நம்பறாப்ல இல்லையே" என்றாள் காயத்ரி.

"இல்ல சத்தியமா" என்றான் பிரவீன்.

"எங்க அப்பாகிட்ட எனக்கு பிடிக்காத ஒரே விஷயம் அதான், அவரு மட்டும் தண்ணி அடிக்கறத நிறுத்திட்டாருன்னா அவரை போல அப்பா யாருக்கும் உலகத்துல இல்ல, பட் இப்படி தண்ணி அடிச்சு சம் டைம்ஸ் எங்க ஸ்ட்ரீட் மொனைல விழுந்துருவாரு, எவ்ளோ நாள் நானும் ரம்மியும் போய் தூக்கிட்டு வந்திருக்கோம், தெருவே வேடிக்கை பாக்கும், எங்களுக்கு அவமானமா இருக்கும். நல்ல யோசிச்சு பாருங்க, ரெண்டு வயசுக்கு வந்த பொண்ணுங்க நைட் ல குடிச்சுட்டு வர்ற அப்பாவை கைத்தாங்களா தூக்கிட்டு போறத ஊரு பாத்தா எப்படி இருக்கும்" கண்கள் கலங்கின விஜிக்கு.

"ஐயோ, விஜி, பீல் பண்ணாதீங்க, எல்லாம் சீக்கிரம் மாறிடுவாரு, இப்படி மணி மணியா ரெண்டு பொண்ணுங்கள பெத்துருக்காரு, கண்டிப்பா உங்க நல்ல மனசுக்கு எல்லாமே நல்லபடியா நடக்கும் விஜி" என்றான் பிரவீன்.

"தேங்க்ஸ் பிரவீன்" என்றாள் விஜி.

"அண்ணா, எங்களையும் உங்க பிரெண்ட்ஸ் க்ரூப்ல சேத்துக்கோங்க அண்ணா, நான் ரொம்ப நேரமா யோசிச்சுட்டே வரேன் கேக்கலாமா வேணாமான்னு, பட் இந்த மாதிரி ஒரு நட்பு உலகத்துல எங்கயும் கெடைக்காது" என்றாள் காயத்ரி.

"ஓ தாராளமா, ஒரு நாள் எங்க மேட்ச் பாக்க வாங்க, எல்லாரையும் இன்னொருமுறை இன்ட்ரோ பண்றேன், கண்டிப்பா உங்கள எங்க பிரென்ட் க்ரூப்ல சேத்துக்கறோம்" என்றான் பிரவீன்.

"அது சரி காயத்ரி...உங்கள பத்தி சொல்லவே இல்லையே" என்றான் பிரவீன்.

"எங்க பேமிலி தான் அஞ்சு பேருன்னு சொல்லிட்டேனே" என்றாள் காயத்ரி.

"ஏம்மா இதுக்கு பேரு இன்ட்ரோ வா?" என்றான் பிரவீன்.

"நான் சொல்றேன்...." என்றாள் விஜி.

"யார் வேணாலும் சொல்லுங்க, எங்க வண்டி ல எல்லாருக்கும் பேச்சு சுதந்திரம் இருக்கு" என்றான் பிரவீன்.

"இவ இருக்காளே, பயங்கர புத்தக புழு, செமயா படிப்பா, அப்பாக்கு பயங்கர செல்லம், அவளும் அப்பாமேல அவ்ளோ பாசமா இருப்பா. அப்பாகிட்ட எதையும் மறைக்க மாட்டா, அவங்க அப்பாக்கு அவமேல ரொம்ப காண்பிடண்ட்டு.அவளும் அவங்க அப்பா வெச்சுருக்கற நம்பிக்கையை என்னிக்கும் காயப்படுத்த மாட்டா" என்றாள் விஜி.

"செம்ம காயத்ரி,,இப்டி தான் இருக்கணும்" என்றான் பிரவீன்.

கார் கோலியனூர் கூட்ரோட்டில் இருந்து வளவனூர் மார்க்கத்தில் செல்ல தொடங்கி இருந்தது.

பகுதி 19 முடிந்தது.

-----------தொடரும்----------------

எழுதியவர் : ஜெயராமன் (5-Sep-17, 9:33 pm)
சேர்த்தது : நிழலின் குரல்
பார்வை : 319

மேலே