கூடா நட்பு

நேரிசை ஆசிரியப்பா

தோழனும் நஞ்சே தோழியும் நஞ்சே
சூழுறும் துயரைச் சுட்டெரிக் காத
தோழனும் நஞ்சே தோழியும் நஞ்சே !
ஆழமாம் அன்பை அளந்திடுங் காலை
நண்பனும் நஞ்சே நண்பியும் நஞ்சே
பண்பட இடித்துப் பழக்கா ரெனிலோ
நண்பனும் நஞ்சே நண்பியும் நஞ்சே !
உண்மை மறுத்தும் உணர்வை மறைத்தும்
கள்ளக் கபடக் கதைகள் புனைந்தும்
உள்ளக் குகையில் உறழைப் பதுக்கி
வெளியில் பொன்மான் என்று நடித்தும்
தெளிவில் லாதோர் நேரம் வருங்கால்
குழியை வெட்டும் குணத்தார்
பழக்கமும் நஞ்சே பதமறி நெஞ்சே !

-விவேக்பாரதி

எழுதியவர் : விவேக்பாரதி (6-Sep-17, 4:17 pm)
சேர்த்தது : விவேக்பாரதி
பார்வை : 52

மேலே