பிரார்த்தனை

இலக்கற்றுத் தொடங்கும்
பயணங்களுக்கு
வரைபடங்கள் தேவையில்லையென்று
சொல்லும் மனதின் ஆதிக்கத்தில்
தன்னிச்சையாய் நடக்கும்
பாதங்களின் சௌகர்யத்தைப் பற்றி
கவலைப்படும் செருப்பின்
வார் அறுந்துபோகும் தருணம்
ஒரு கோடைக்காலத்தின்
நண்பகல் நேரமாய்
இருந்துவிடக் கூடாதென்றுதான்
தொடர்ந்துகொண்டிருக்கிறது
அந்த
ஏதிலியின் பிரார்த்தனை !

@இளவெண்மணியன்

எழுதியவர் : இளவெண்மணியன் (6-Sep-17, 6:57 pm)
சேர்த்தது : இளவெண்மணியன்
பார்வை : 125

மேலே