கல்லூரிக் காதலியின் புலம்பல்
![](https://eluthu.com/images/loading.gif)
கல்லூரிக் காதலியின் புலம்பல்
கவிதை by : கவிஞர் பூ. சுப்ரமணியன்
உன் உருவை
என் இதயத்தில்
நன்றாக செதுக்கியது
நான்தான் தெரியுமா !
என் விழிகளில்
நிறைந்தவன்
நீதான் தெரியுமா !
உன் மூச்சுக் காற்றை
உணர்ந்து அதிகமாய்
சுவசித்தவள்
நான்தான் தெரியுமா!?
உன்னைப் பற்றி
காதல் கவிதைகளை
கட்டுக் கட்டுகாக
எழுதிக் குவித்தது
நான்தான் தெரியுமா!?
என்னைக் காதலிப்பதாக
எல்லாரிடமும் கூறி
திரிந்துகொண்டு இருக்கிறாய்
என்னைத் தவிர
உனக்குத் தெரியுமா !
என்
விழிகள் இதழ்கள்
துடிப்பதைப் பார்
இதய ஒலியை
கேட்டுப் பார்
உன் பெயரைத்தான்
உச்சரிக்கும் தெரியுமா !
உன்னை நினைத்து
உறங்காத இரவுகள்
நான் தலைசாய்க்கும்
தலையணையைக்
கேட்டுப் பார்
உனக்குத் தெரியும் !
பூ.சுப்ரமணியன்,
பள்ளிக்கரணை, சென்னை