மௌனம் உடைத்து பேசு
 
 
            	    
                கனவுகள் எனும் ஒன்றை மறந்தே போனேன் ! 
உறக்கம் வந்தால் தானே உன்னைப்பற்றி கனவு காண 
நினைவால் தானே நித்தம் நெஞ்சம் உருகி சாகிறேன் !
காற்றில் கலந்தே  போக கடவுளிடம் 
வரம் ஒன்றை கேட்கிறேனேடி ! 
உன் மூச்சுக்காற்றை தழுவிக்கொள்ளும் ஆசையில் !
காதல் உன் மேல் கொண்டேனடி   ! கடல் அளவா !
மலை அளவா ! வான் அளவா ! மூன்றுமே சேர்ந்த 
மொத்த அளவாய் முழுதாய் எனக்குள் நிரம்பி 
உன் நினைவு அடர்த்தியில் நெஞ்சமெல்லாம் தவிக்குதடி !
மல்லிகையாய்  நித்தம் உருவெடுத்து 
பிறக்க வரம் கேட்கிறேனடி 
உன் கூந்தல்  வாழ்ந்து  மடியலாம் என்று !
இயல்பாக  இருந்தவனை இப்படியா !
சுனாமியாய் வந்து சுருட்டி
உனக்குள்  இழுத்துக்கொள்வாய் !
இதயத்தின் துடிப்பை நிறுத்தி
இன்றே இறந்துவிடலாம் என 
தோன்றுகிறது..!
உன் மடிசாய்ந்து கதறி அழ தோன்றுகிறது
என் கன்னங்களில் வழிந்தோடும்
கண்ணீர் துடைக்க நீ வரவேண்டும் !
என் காதல் புரிந்தவளாய் என் காயத்திற்கு மருந்திட
உன் வார்தை வரம் வேண்டும் எனஇதயம் உன்னிடம் கெஞ்சவே
தோன்றுகிறது
கெஞ்சி கதறுகிறேன் என் நெஞ்சம் வெடித்து  சாவதற்குள் 
என்னோடு  பேசி விடு !
இல்லையேல் உன் மடி படர்ந்து 
நிம்மதியாய் சாக 
எனக்கு பேரின்ப வரம் கொடு !
உடனே வருகிறேன் !
 
                     
	    
                
