மூன்றாம் பிறை

( ஆசிரியப் பா)
------------------------------------
இந்துப் பௌர்ணமி இந்துவில் முக்கியம்
இந்தும் மன்னரின் இந்து வழியே
இந்துத் தேய்பிறை யாக வந்ததேன்
இந்து வில்சிலர் பௌத்தர் இங்கே
இந்துக் களில்சிலர் சமணர் இங்கே
இவரில் பயந்தார் இசுலாம்
இவரில் பலரும் கிருத்து மதமே

இந்துப் பலரும் நொந்தார் மாறலால்
இந்து மதம்மா றினானே சொந்தமாய்
இவர்அற் பமாய்மதம் கவனமாய் மாறுவர்
இவர்மத மாற்றம் கனிஸ்கனால் பௌத்தம்
இவர்பல அரசால் இவ்விடம் சமணராம்
இவர்மா லிகாபூ ராலே இசுலாமாம்
இவர்வெள் ளையரால் தவறாக் கிருத்துவர்
இவர்மதம் இன்னும் பிறமதம் போவர்
இந்துவை எதிர்ப்பவர் யார்முன் இந்துவே
இந்துதேய்ந் ததேபிறை மூன்றாய்
இந்துத் திராவிட மாயையா லழிந்ததே

இந்தணிந் தசிவனை வணங்கநாம் இந்துவடா
இதுத்தெரி யாநீ இந்துவா யாரடா
இதுத்தெரிந் தபின்தான் வெள்ளைச் சொன்னான்
எந்த அடிப்படை யில்நமைச் சொன்னான்
இந்துவை வணங்கஇந் தென்றான்
சந்தே கமின்றி உணர்! நாம் இந்துவே!

## (இந்து= சந்திரன்)

---ராஜப் பழம் நீ (6-Sep-2017)

எழுதியவர் : பழனிராஜன் (7-Sep-17, 11:16 am)
சேர்த்தது : Palani Rajan
பார்வை : 969

மேலே