வாழ்க்கை
நீ இல்லை என்றால்
வாழ்க்கை இல்லை என்று நினைத்தேன்
திருமணத்திற்கு முன் !
நீ இல்லா வாழ்க்கை
வேண்டும் என்று பிராதித்தேன்
திருமணத்திற்கு பின் !
கடவுளே குழம்பி விட்டார் உன்னால்
அதனால் தான்
உன்னை அனுப்பி விட்டார் போலும் பூலோகத்திற்றிக்கு
நீ ஒரு புரியாத புதிர் என்பதை விட
விடை இல்லா கேள்வி!
விடையை தேட முயற்சி செய்தவர்கள்
எல்லாம் தோற்று விட்டனர்!
புது உலகம் வேண்டி பிராத்திக்கிறேன்
பெண்கள் இல்லாமல்
கனவு கண்டேன் !!
அவ்வுலகம் மிக அமைதியான
மயானமாக காட்சி அளித்தன
காலையில் அம்மா எழுப்பினாள்
காபியுடன் புரிந்து கொண்டேன்
ஒரு பெண் தெய்வமாகிறாள்
தாய் ஆனவுடன் !!!!