நீட் தமிழகத்திற்கு தேவை இல்லாதது

பிஜேபி தலைவர்கள் அனைவரும் நீட் தேர்வுக்கு அரவணைப்பாக
தொண்டை கிழிய ... அதாவது கத்தி கத்தி பேசி வருவது என்பது
அவர்களும்,அதாவது பிஜேபி யும், காங்கிரஸ் அரசும் சேர்ந்து கொண்டுவந்த
நீட் தேர்வு... இந்தியா முழுவதும் நடக்க வேண்டும் என்பதாலும்
ஏழை மக்கள் மருத்துவர் ஆகிவிடக் கூடாது என்பதாலும் தவிர
வேறொன்றும் மிகப் பெரியதாக ஏதுமே இல்லை என்பது என் கருத்து.
சரி நீட் வரட்டும் உங்களின் எண்ணப்படி, அதற்கு முன்பாக
இந்தியா முழுவதும் ஒரே பாடத்திட்டமும் தேர்வு முறைகளும்,
ஒரே மாதிரியான கல்வி கற்கும் சூழ்நிலைகளையையும்,
ஒரே மாதிரியான கல்வி நிலையங்களையும், அது போக
எல்லா கல்வி நிலையங்களும் கட்டணமில்லாததாகவும்
அரசு களின் கீழ் அமைந்த வாரும் இருக்க வேண்டும்... செய்வீர்களா ?
இதில், பத்தாம் வகுப்பு வரை நடுவண் அரசின் எந்த இடையூறும் இல்லாத
அந்த அந்த மாநிலங்கள் கல்விப் பலகையின் பாடத்திட்டங்கள்...
அந்த அந்த மாநிலங்களின் நிலைப்பாடுகளுடன் அவர்களே அமைக்கவும்
பதினொன்று மற்றும் பன்னிரண்டு வகுப்புகள் மட்டும் அந்த அந்த
மாநிலங்களின் எதிர்ப்பில்லாத நடுநிலையான பாடத்திட்டங்கள்
இந்தியா முழுவதும் இருக்க வேண்டும் என்பது என் விருப்பு...
இல்லை என்றால்... அதெல்லாம் நடக்காது என்றால்... இது தேவையில்லாது...
ஏனெனில் அந்த அந்த மாநிலங்களில் அரசு மருத்துவர்கள்
பணிக்காக தேர்வாகிறார்கள் என்றால்... இல்லை தனியார் மருத்துவமனைகளில்
பணிக்காக தேர்வாகிறார்கள் என்றால் பட்டம் மட்டும் போதாது
எழுத்து முதல் நேர்முகத்தேர்வு வரை வெற்றி பெற்ற பிறகுதான்
மருத்துவ பணிக்கு அமர்த்தப்படுகின்றார்கள்... என்பதால் நீட் தேவையில்லை.
அய்யா எல்லாருக்கும் ஒரு மிக பெரிய வேண்டுகோள்
கண்டிப்பாக மருத்துவம் படிக்க மேனேஜ்மென்ட் சீட்டுகளை முதலில்
தடை போடுங்கள்,
பன்னிரண்டு வரை மாணவ செல்வங்கள் படித்த பாடத்திட்டங்களை
மதியுங்கள்...
நீட் தமிழகத்திற்கு தேவை இல்லாதது.
- சு.சுடலைமணி