அன்பான தோழி உடன் இருந்தால்
அகிலம் மட்டுமல்ல ஆண்ட சராசரம்
அனைத்தும் கொண்டு வர முடியும்
நம் காலடியில்
நம் திறமை நமக்கு தெரியும் முன்
தெரியும் அவளுக்கு
நம் குறைகளை நாசூக்காய்
நமக்கே சுட்டி காட்டுவாள்
குறைகளை களைந்து நிமிர்ந்தால்
தோளில் தட்டி செல்லுவாள்
உணர்கிறேன் இன்னொரு தாயை
அவளிடம்
பொய் பேச மறுக்கும் இதயம்
அவள் கண்களை கண்டு மட்டும்
நட்பால் மட்டும் நட்பாய் மட்டும்