கடவுள் இருந்தால்

எங்கே சென்றது என் இன்பமான நாட்கள்
அந்த காலம்தான்
பதில் சொல்ல வேண்டும்
சோகமாக இருக்க
ஆசை இல்லையம்மா எனக்கு
ஏனோ தெரியவில்லை
இன்பம் என்பது
என்னை கண்டால் ஓடி ஒளிகிறது
எங்கு சென்று அதை தேட
விழி மூடியும் கண்ணில் நீர் தேங்குகிறது உறக்கத்தில் கண்ணீராக
கடவுளே என் இன்ப வாசல் திறவாயோ
என்னால் முடிந்த முயற்சியை கொண்டேன் அந்தோ பாவம் வாசல் வழி அறியேன்
இறக்கம் கொண்ட கடவுளே என் மீது கொஞ்சம் கருணை காட்டு என் முயற்சிகளுக்கு துணையாய் இருந்து வெற்றிக்கான வாசல் திறக்க
தூங்கிய என் விழிகள் விழித்து விட்டன இன்று பயந்து நடுங்கிய இதயம் வெற்றியை
தேட துடிக்கிறது
என் வேண்டுதல் இறைவா உன் பாதத்தில் சமர்பிக்கிறேன் கடவுள் என்பது மெய்யானால் எனக்கு வரம் கொடுக்கட்டும் வெற்றி பெற