வான அழகி

பால் நிலாவே!
அன்னையாய் உன்னைக் கண்டேன்
உன் ஒளியைப்
பாலாய் ஊட்டினாய்!
தந்தையாய் உன்னைக் கண்டேன்
உன்னைப் பற்றிக்
கவி எழுத அறிவூட்டினாய்!
உடன்பிறந்தவனாய்
உன்னைக் கண்டேன்
நான் போகும் இடமெல்லாம்
உடன் வந்தாய்!
என் துணையாய் உன்னைக்கண்டேன்
வழிப் பாதையைத்
தெளிவாக்கினாய்!
என் தோழியாய்
உன்னைக் கண்டேன்
அவள் முகமாய் நீ சிரித்தாய்!
வான அழகியாய்
உன்னைக் கண்டேன்
உன்னைக் கண்ட கண்கள்
உன்னை மட்டுமே
காணத் துடிக்கிறதே!
என்னே உன் அழகு!

எழுதியவர் : Priyakaryhikeyan (10-Sep-17, 3:15 pm)
Tanglish : vaana azhagi
பார்வை : 267

மேலே