என் பாதி
அடி தோழியே....
எனக்கும், என் கணவருக்கும் கூட
இல்லையடி இத்தனை பொருத்தம்
என் அரை என்பதா?
என் நிழல் என்பதா?
நம் அகம் முழுதும்
கொட்டிக்கிடக்கும் அத்தனை
ஒற்றுமைகள் ...
சுக துக்கத்தில் மட்டும்
பாதி அல்ல அன்பே ,
உன் சுமை
முழுதும் சுமக்கும்
என் இதயம்
என் நிழலோ என்றும் உன்னுடன்
உன் நினைவோ என்றும் என்னுடன் ...
இப்படிக்கு
உன் உயிர் தோழி
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
