காதல் நெருப்பு

மழைக்காலம் முடிந்து
பனிக்காலம் துளிர்த்த
மதியம்
வீடு சுவருக்கு
வெள்ளை அடிக்க
வீட்டுக்காரியின் அடம் !!

ஒதுங்க வைக்கும்
ஒத்துழைப்பில்

மறந்து போனவைகளில்
இருந்து மறுபடியும்
தேடுகிறேன் !

அன்று நீ எடுத்த
பல்லவன் பயண சீட்டு !!
ஆசை மிட்டாயின்
கசங்கிய காகிதம்!!
கரும்பு போட்ட பொங்கல் வாழ்த்து !!!

இன்ன பிற வஸ்துக்களோடு
இனிப்பாய் நீ
நினைவில்!!

கால் நூற்றாண்டு
காலத்திற்கு பிறகும்
கனல்கிறது
காதல் நெருப்பு!!!

எழுதியவர் : ஸ்ரீஜே (12-Sep-17, 3:13 pm)
சேர்த்தது : ஸ்ரீஜே
Tanglish : kaadhal neruppu
பார்வை : 112

மேலே