கிறுக்கலும் - கிறுக்கணும்

சின்ன பார்வை தான் அது,
சில நிமிடம் புரியாமல் போனேன்,
புரிந்தவுடன் ஒரு நிலை தடுமாற்றம்,
புகைப்பட புன்னகை போல் மாறாமல்,
சிரித்தே இருந்தது என் உதடுகள்;
மறுபடியும் குளிர கேட்டது மனமும்,
தைரியத்துடன் தரிசன தேடல்;
மறுபடியும் தயார் நிலையில் என் கண்ணும்,
பார்த்து விட துடித்தது என் எண்ணம்,
சிந்தனையில் சிதறலும் வரும்,
பதறினான் காலனும்-கடிகார வடிவில்,
தலை நிமிர்ந்தால் அழகு பதுமையாய்,
கண்ணோடு கண் பார்க்கும் கணத்திற்கு,
வலிமை எத்தனையோ, சற்றே
சிலந்தி வலையில் சிக்கிய ஈசல் போல் ,
பதட்டம் அடைய ஒன்றுமில்லை,
பழக்கமும்மில்லை ! பசை போட்டு,
ஒட்டியதோ என் கண்கள் அவள் மேல்;
இமைகளும் சிம்மிட்ட மறந்தன,
அருகிலிருந்தவன் அறைகூவலிட,
மசிந்தவன் மனமும், கேட்காத காதும்,
உரைக்காத உடம்பில் உதைத்தான் ஒரு உதை,
திடுக்கிட்டு திணறியதை பரிட்சித்த பூவோ,
சிரித்து சிலிர்க்க வைத்தது என்னை;
இயல்பு மறந்த இளையவன், இருக்கும்
இடம் தனை மறந்ததே போனான், சட்டென
செவிகளுள் பாய்ந்ததோர் கரும குரல்;
"மூதேவி மூடிட்டு red & follow போடு" என்றான்,
என் நண்பன் கருவாயன் !!!

கருத்து: கேரம் போர்டு விளையாடும் பொது கவனம் தேவை !!!
இன்னைக்கு இவன் கூட இருந்ததுக்கு நல்ல வேல பாத்துட்டான், பண்ணி பய :(

எழுதியவர் : ப்ரசாந்த் செல்வா (12-Sep-17, 10:25 pm)
சேர்த்தது : prasanthKumar
பார்வை : 92

மேலே