என் உயிரினும் மேலான - நெடுந்தொடர் - - - பாகம் 36
காயத்ரியின் மனது பெரும் போராட்டத்தை நடத்திக்கொண்டிருந்தது. விஜி தான் முக்கியம், குழந்தை பருவம் முதல் இப்போதுவரை விஜி கூடவே இருக்கிறாள். இன்பம் துன்பம் யாவிலும் இருக்கிறாள், அவளது நட்பினால் தான் நம் வாழ்க்கை அழகாக இருக்கிறது. படிப்பு முதல் பொழுதுபோக்கு வரை எல்லாம் விஜியுடன் தான். ஆனால் அவளது கோபம் துரித முடிவுகள் ஆரம்பத்திலிருந்தே பல மனஸ்தாபங்களை பல நேரங்களில் பல மனிதர்களிடம் ஆக்கி இருக்கிறது.
இப்போதும் முபாரக் பிரவீன் ரியாஸ் விஜய் என்று ஒரு நல்ல குணமுடைய நட்பு வட்டாரத்தை விஜி துன்புறுத்தி மனவருத்தம் அடைய வைத்திருப்பது இன்னும் தவறான செயல் தான். ஆனால் அவளது மனநிலையில் அவள் செய்தது சரி என்று எடுத்துக்கொண்டால் அவளால் ஏன் பிரவீன் முபாரக் இடத்தில் இருந்து யோசிக்க முடியவில்லை.....பல கோணங்களில் பல கேள்விகள்....பதில் விஜி தான் கொடுக்க வேண்டும்.
ஆனால் விஷயத்தை விஜய்யிடம் கொண்டு செல்வது எப்படி. நர்கீஸ் விஜய்யிடம் எதையும் சொல்லக்கூடாது என்று சொல்லி இருக்கிறாள். சொன்னால் அவருக்கும் முபாரக்கிற்கும் இடையே மனஸ்தாபம் ஏற்படும். நம்மை நம்பி சொன்னதற்கு நாம் அவர்களை கஷ்டத்தில் விட்டுவிட கூடாது. குழப்பத்தில் இருந்து காயத்ரி மீளவே இல்லை. இறுதியாக ஒரு முடிவெடுத்தாள். என்ன ஆனாலும் விஜி இதை தெரிந்துகொள்ள வேண்டும். அவள் தெரிந்துகொண்டு அவள் மனம் மாறி பிரவீன் முபாரக் எல்லாரிடமும் பேசிவிட்டால் இந்த பிரச்சனை எல்லாம் முடிந்துவிடும். அவர்களும் கோவித்துக்கொள்ள மாட்டார்கள். ஆனால் விஜி தன்மேல் கோபப்படக்கூடாது. நீங அவளுக்கு தெரியாமல் பிரவீன் முபாரக் எல்லாருடனும் பேசிவிட்டேன் என்று அவளுக்கு தெரிந்து நான் சொல்வது எதையும் அவள் கேட்காமல் கோபத்தில் என்னுடன் பேசுவதையும் நிறுத்தி கூடாது. அதற்கு அவளுக்குள் என்ன இருக்கிறது என்பதை ஆராய்ந்து அதற்கேற்றாற்போல் தொடரவேண்டும்.
எல்லாம் யோசித்துக்கொண்டிருக்கும்போதே விஜய்யிடம் இருந்து கால் வந்தது.
"என்ன காயத்ரி, எப்படி இருக்க, என்ன பண்ற" என்றாள் விஜி.
"சும்மா தான் டி இருக்கேன், நீ வீட்டுக்கு வந்துட்டியா இல்லன்னா இன்னும் கடலூர் ல தான் இருக்கியா?" என்றாள் காயத்ரி.
"நான் வந்துட்டு இருக்கேன், ஆல்ரெடி ராம்பாக்கம் தாண்டிட்டேன், இந்து கிருஷ்ணா ல வரேன், இன்னும் அரை மணி நேரத்துல வந்துருவேன். உன்கிட்ட ஒரு முக்கியமான விஷயம் பேசணும், அதான். நான் வந்ததும் உனக்கு போன் பண்றேன், நீ எங்க வீட்டுக்கு வா" என்றாள் விஜி.
"நானும் உன்கிட்ட முக்கியமான விஷயம் பேசணும், கண்டிப்பா வரேன்" என்றாள் காயத்ரி.
"நான் சொல்லப்போறது ரொம்ப ரொம்ப சந்தோஷமான விஷயம் டி எனக்கு, எனக்கு சந்தோஷம்னா உனக்கும் தான" என்றாள் விஜி.
"கண்டிப்பா விஜி" என்றாள் காயத்ரி.
எப்போது அரைமணி நேரம் ஆகும், எப்போது விஜி வருவாள், அவள் என்ன சொல்ல போகிறாள், தான் எப்படி அவளிடம் தான் மனசுக்குள் இருக்கும் விஷயத்தை சொல்ல போகிறோம் என்று யோசித்துக்கொண்டிருக்க
விஜியின் போன் வந்தது.
"என்ன டி வந்துட்டியா" என்றாள் காயத்ரி.
"ஆமாம் டி, நீ உடனே வா" என்றாள் விஜி.
"ஓகே டி, அப்பா அம்மா விழுப்புரம் ரீச் ஆயிட்டாங்க, நவ் தே ஆர் நீரிங் ராகவன்பேட்டை. அவங்க வந்ததும் வரேன்" என்றாள் காயத்ரி.
"ஓகே டி, நானும் அதுக்குள்ள பிரெஷ் அப் ஆய்டறேன்" என்றாள் விஜி.
அரை மணி நேரம் கழிந்திருக்கும்.
காயத்ரி விஜியின் வீட்டிற்கு வந்தாள்.
அங்கே விஜியும் அவளது தாய் புவனாவும் பேசிக்கொண்டிருந்தனர். ரம்யா அவர்கள் பேசுவதை கேட்டுக்கொண்டிருந்தாள்.
காயத்ரி வந்ததும், "ஏய் வாடி" என்றபடி சிரித்தாள் விஜி.
"என்ன டி, கடலூர் எப்படி இருந்துது" என்றபடி உள்ளே நுழைந்தால் காயத்ரி.
"நத்திங் கிரேட் டி, நீ சொல்லு, ரெண்டு நாள் என்ன பண்ணின" என்றாள் விஜி.
"சும்மா தான் இருந்தேன், நத்திங் ஸ்பெஷல்" என்றாள் காயத்ரி.
"சரி, நீங்க பேசிட்டு இருங்க, நான் கோவிலுக்கு போயிட்டு வரேன்" என்றபடி கிளம்பினாள் புவனா.
"என்ன டி இன்னிக்கு உன் அம்மா ரொம்ப ஸ்மாய்லி முகத்தோட இருக்காங்க" என்றாள் காயத்ரி.
"ஏய், அதை ஏன் கேக்கற, நேத்து எங்க அப்பா நைட் வீட்டுக்கு தண்ணி அடிக்காம வந்திருக்காரு, அம்மா கிட்ட ரொம்ப நேரம் மனசு விட்டு பேசிருக்காரு, இனிமே தண்ணி அடிக்க மாட்டேன், என் பொண்ணு விஜி ரம்யா...அப்டி இப்படின்னு ஒரே பாசமான பேச்சாம். தண்ணி நடிக்கமாட்டேன் னு ப்ராமிஸ் எல்லாம் பண்ணிருக்காரு, வந்ததும் சாமி எல்லாம் கும்பிட்டு....அம்மா பயங்கர ஹாப்பி டி" என்றாள் விஜி.
"எப்படி இந்த திடீர் மாற்றம்" தெரியாததை போல் கேட்டாள் காயத்ரி.
"நான் தான் காரணம், இந்த மாற்றம் என் செல்ல பொண்ணு விஜி ரம்யாக்காக. அவங்க வாழ்க்கை நம்மளால எந்த பாதிப்பும் இருக்க கூடாது, யாராரோ நம்ம பொண்ணு மேலயும் நம்ம குடும்பத்து மேலயும் அக்கறை காட்டும்போது நான் என் பொண்ணுங்களுக்காக இந்த கூடிய விட மாட்டேனா னு சொல்லி இருக்காரு டி" என்றாள் விஜி.
"ஆமாம் அக்கா, அப்பா எங்களுக்கும் நாங்க கடலூர் ல இருக்கும்போது போன் பண்ணினாரு, ரொம்ப பாசமா பேசினார், இன்னிக்கு எங்களை விழுப்புரம் அர்ச்சனா ரூப் கார்டன் கு கூட்டிட்டு போறேன் னு சொல்லிருக்காரு" என்றாள் ரம்யா.
"ரொம்ப சந்தோஷமா இருக்கு விஜி, எனக்கும் இந்த வாரத்துல எல்லா ப்ராப்ளேமும் சால்வ் ஆச்சு, உனக்கும் பெரிய ரிலீப் கெடச்சுருக்கு.இடுக்கு எல்லாம் என்ன காரணமா இருக்கும் விஜி, ஏதாவது சனி பெயர்ச்சியா" என்றாள் காயத்ரி சிரித்துக்கொண்டே.
"வாடேவர் இட் இஸ். ரொம்ப சந்தோஷமா இருக்கேன் டி" என்றாள் விஜி.
"நானும் தான் டி" என்றாள் காயத்ரி.
"நீ ஏதோ சொல்றேன் ன்னு சொன்னியே, என்ன அது" என்றாள் விஜி.
"இல்ல, அப்புறம் சொல்றேன், நாட் தட் இம்பார்ட்டண்ட், நீ ரொம்ப சந்தோஷமா இருக்க, பாக்கவே எனக்கு சந்தோஷமா இருக்கு, உன்னோட அப்பாகூட அர்ச்சனா ரூப் கார்டெனுக்கு போயிட்டு வா, அப்புறம் பேசலாம்" என்றாள் காயத்ரி.
"ஏய், நீயும் வாயேன்" என்றாள் விஜி.
"இல்ல டி, அப்பா அம்மா இப்போ தான் வந்திருக்காங்க, சோ நான் அவங்க கூட இருக்கேன், நீ போயிட்டு வந்து சொல்லு" என்று சொல்லிவிட்டு கிளம்பினாள் காயத்ரி.
"ஏய், பிரவீன் முபாரக் யாராவது போன்ற் பண்ணினாங்களா" என்றாள் விஜி.
"இல்ல டி, பண்ணல, பாரு, நீ ஒருநாள் அவங்கள அப்டி ஹார்ஷா பேசியதும் நம்மள மறக்கவே மாட்டோம், என்னிக்கு இருந்தாலும் பெஸ்ட் பிரென்ட் அது இதுன்னு சொல்லிட்டு இப்டி பேசாம விட்டுட்டாங்க இல்ல, எவ்ளோ செல்பிஷ் இல்ல" என்றாள் காயத்ரி.
விஜிக்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை.
"முக்கியமா இந்த பிரவீன் கூட பேசல பாரேன், உன்கிட்ட கூட பேசல பாரு, சரியான ஆளு டி அவன் " என்றாள் காயத்ரி.
இதற்கும் மௌனமாய் இருந்தாள் விஜி.
"சரி டி, நான் கிளம்பறேன்"என்றபடி நடையை கட்டினாள் காயத்ரி.
"ஓகே டி, நான் திரும்பி வந்ததும் கால் பண்றேன்" என்றாள் விஜி.
பகுதி 36 முடிந்தது.
-----------------தொடரும்-----------------