விழித்தெழுவாய் தமிழா
![](https://eluthu.com/images/loading.gif)
கருத்து கவிஞ்சனின் கருங்சட்டை மேல்
ஆசை கொள்வோம் தமிழா
கடமை காதலனின் கதர் சட்டை மேல்
மோகம் கொள்வோம் தமிழா
கிடைக்க போவதோ கிழிந்த ஆடை
கிழித்ததோ நாகரிக கோமாளி
தினம் தினம் சிசுவதை நடக்கிறது
காவிரித்தாயின் கற்ப படுக்கையில்
குருதி புனலும் சொட்டவில்லை
அதையும் உருஞ்சி விட்டான் அந்நியன்
தேசிய நுழைவு தேர்வு எனும் நூற்கயிரால்
மாணவ மணிகளின் சிரங்களை
மாலை சரங்களாய் கோர்க்க முற்பட்டு விட்டான்
உரிமையும் உணர்வையும் இழந்த
உழவனின் உயிரையும் உருவி விட்டான்
விழித்தெழுவாய் தமிழா
உரிமையும் உணர்வையும் இழந்த தமிழா
விழித்தெழுவாய்.....