அம்மா

கருவாக்கிய தாயே , உருவாக்கிய உயிரே,
காற்றில் கரைந்து போனாயோ
உயிர் உறைந்து போனாயோ ...
எனை தங்கிய உயிரே,
என்னை பிரிந்த தாயே ,
மண்ணில் மறைந்து போனாயோ ...
நீ பேசிய வார்த்தை , நித்தமும் கேட்க்கும்,
காற்றில் உன் ஓசை , அது என் சுவாசம் .,
உன் இரத்தால் வளர்ந்த உயிர்
உனை இழந்து வருத்தம்மா ,
நீ தந்த சரீரம் இங்கு
நீயின்றி தவிக்குதம்மா ...
பிறந்த உன் உயிர்
பிரிந்து விட்ட உன் உயிருக்காய்
உருகி தவிக்குது ,
ஏன் சென்றாய் எனைப்பிரிந்து...
கட்டி அணைத்த கைகள் , இன்று
கைவிரித்து போனதம்மா ....
யாரோடு இனி என் வாழ்வு ,
யார் தருவார் தாயன்பு ,
தெய்வமும் தோற்று போகுமே
அளவற்ற உன் அன்பில் ...
கண்ணீரின் வலிகளில்
காத்திருக்கிறன் உன் இடத்தில் ..
கருவறையில் என் முகம் காண
பத்து மாதம் காத்திருந்தவளே ...
கல்லறையிலும் காத்திரு ..
எனை மறந்து மண்ணில் , உன்
இரு கண்களில் உறக்கம் ஏனம்மா ..
இங்கு சாபங்கள் முடித்து , மீண்டும்
வருவேன் உன் கல்லறையிலும்,
எனை சுமந்த கருவறைக்கு .....

எழுதியவர் : சுபா பிரபு (14-Sep-17, 6:06 pm)
Tanglish : amma
பார்வை : 430

மேலே