வெளிநாட்டு வாசிகள்
காய்ச்சலால் அவதியுறும் தேகத்தின் வேதனையையும்,
கவனிப்பாரற்று ஓர் இருட்டறைக்குள் முடங்கி கிடக்கும்,
மன உளைச்சலை மறைத்து கொண்டு,
மனைவி,குழந்தைகளிடம் இயல்பாய் இருப்பதை போல்,
தொலைப்பேசியில் உரையாடும் வலி,
பிரசவ வலியை விட வலியது..