உழைப்பாளியின் துன்பம் -- எண்சீர் விருத்தம்

உழைப்பாளியின் துன்பம் -- எண்சீர் விருத்தம்

மூட்டைதனை சுமக்கின்றான் அந்தோ பாரீர்
------- முகவரியும் தொலைந்துபோனக் கூலி யாகி
நாட்டினிலே திரிகின்ற கூட்டம் காணீர்
------- நலம்பேண வாய்ப்புண்டோ சொல்வீர் நீங்கள்
பாட்டினிலே பாரதியும் பாடி வைத்தான்
------- பாரினிலே உழைப்பாளி சோகம் தன்னை
காட்டினிலே வாழுகின்ற விலங்கு போலே
-------- கணப்பொழுதும் துன்பத்தில் விழுகின் றாரே !

ஆக்கம் :- சரஸ்வதி பாஸ்கரன் ( நி . மு . 323 )

எழுதியவர் : சரஸ்வதி பாஸ்கரன் (14-Sep-17, 7:56 pm)
சேர்த்தது : sarabass
பார்வை : 120

மேலே