சகோதரனுமாகிய நண்பனே

சகோதரனில் நண்பனைக் காணலாம்
நட்பில் சகோதரத்தைக் காட்டியவன் நீ
உன்னை அறியாமலே !!

நீ இருக்கின்றாய் என்ற ஓர்
திமிரில் எதையும் கடக்கின்றேன் தினமும்

பல கட்டங்கள் வந்தபோதிலும் உன் முகம்
பார்க்கவே நித்தமும் விடியும் எனக்கு

என் தாய் என் கணவன் மீது நான் மட்டுமே
உரிமை செலுத்த வேண்டுமென்றெண்ணி
பலரிடம் கோபம் கொண்டதுண்டு
அதேபோல் உனக்காகவும் பிறரிடம் நான் கோபம் கொண்டதேனோ !!!

இன்னும் பல ஆண்டுகள் உன்னுடன்
சண்டைகள் இட ஆசைகள் எனக்குண்டு

பார்ப்போம் இக்காலத்திற்கும் இந்த ஆசை உண்டா என்று

எழுதியவர் : ஷோபனா (14-Sep-17, 9:47 pm)
சேர்த்தது : Shobana
பார்வை : 251

மேலே