தமிழ் நாடு

பாரதம் போற்றிடும் தமிழ் நாடு
பாரினில் சிறந்திட்ட நன் நாடு
பாவலர் பிறந்திட்ட நம் நாடு - எங்கள்
பாரதி தோன்றிய பொன் நாடு !

பாற்கடல் முத்தின் முதல் நாடு
பாலக முருகனின் திரு நாடு
பாங்குடன் பாரியின் உயர் நாடு - அன்று
பாடிய அவ்வையின் தமிழ் நாடு !

பால்பழம் தந்திடும் தே நாடு
பார்வையில் பசுமையின் நிறை நாடு
பாவையர் அழகிலும் தென் நாடு - அந்த
பாலகர் மழலையில் மிகில் நாடு !

பாசமும் நேசமும் வளர் நாடு
பாடலும் ஆடலும் தரும் நாடு
பாரோர் புகழும் நம் நாடு - என்றும்
பாரதம் போற்றும் தமிழ் நாடு !

எழுதியவர் : சு. அருள்ராஜ் (24-Jul-11, 4:25 pm)
சேர்த்தது : S.Arulraj
Tanglish : thamizh naadu
பார்வை : 425

மேலே