காதல் தேவசுகம்
காதல் நோய் பெருகி வளர்ந்து
கண்ணில் ஒளி கூடி மிளிரும்
காணும் புதுநோய் புரியாத புதிராய்
கன்னி மனம் கனவில் முழ்கும்!
பாலில் ஊறிய தேகம் ஒளிர
சேலை மூடிய மலர்கள் சிரிக்க
சோலை தென்றல் நடந்தாள் தெருவில்
மாலை நோய் கண்டனர் இளைஞர்!
மொச்சை கண்ணில் மோகம் வைத்தாள்
கச்சைகட்டி காதலை இழுத்தாள்
விம்மிய மனம் விரியும் சுருங்கும்
விடுகின்ற பெருமூச்சை பூக்கள் தாலாட்டும்
தேரேறி வலம்வரும் மகுடமில்லா மன்னர்கள்
தேன்சுரந்து தித்திக்கும் தீஞ்சுவை பழம்பறிக்க
மானோடு மயிலோடு ஒப்பிட்டு புகழ்ந்து
மனதோடுஉறவாடி மடியில் சுகம்காண விழைந்தார்
வான்முட்டும் முகடு அவள் அழகு
நான்மட்டும் ரசித்து கவிதை எழுத
ஊன்உருக்கும் உள்ளொளி உடல் பாய்ந்து
ஊறும் தேவசுகத்தில் அவளோடு கலந்தேன்!