கடிதம்

நீ தேடிய பொழுதுகளில் நான் தொலைந்திருக்கவில்லை
என்னவனே. ..
மேகம் மீட்டெடுத்து நீ வடித்த கவிதைகளை நான் வாசிக்க தவறவில்லை
என் கடைக்கண் பார்வை பார்க்க நீ தவமிருந்தாய் ...
என் அன்பு கிடைக்க வரமிருந்தாய் !!!!
நீ தேடிய பொழுதுகளிலெல்லாம் ஓடி ஒளிந்து
இப்போது உன் மௌனத்தின் ஓசை புரிந்திட
காலமெல்லாம் உன்னை என் மாடி சாய்த்திட
உன் மெலிதழ்களை வாஞ்சையோடு அணைத்திட
பெரும் ஆவல் கொண்டு விரைகிறேன் .....

நீயோ என்னை தொலைத்த பொழுதுகளில் இதயம் கிழிந்து ....
மனமும் நொந்து என் பெயர் மட்டுமே இசைத்திடும் கருவியனாய் !
மணித்துளிகள் ஒவ்வொன்றிலும் உன் காதல் எழுதினாய்...
என்னவனே ஒண்ரை மட்டும் தெரிந்துகொள்!!!
உண்மை காதல் உணர்த்திய உன்னை மட்டுமே
என் இதய கருப்பை தாங்குகிறது ....
பொய் உரைத்தேன் என்று மட்டும் நினைத்துவிடாதே !
என் ஆழ் நித்திரையிலும் என் வாழ்வின் துணை நீதானடா

ஆதர்சனமான உண்மை என்னவென்றால்
எனக்கு தெரியும் ....
இந்த கடிதம் அவனை தவிர மற்ற எல்லோராலும் படிக்கச் கூடும் என்று !!!!

எழுதியவர் : (15-Sep-17, 4:58 pm)
சேர்த்தது : ஜெனோ தியாகு
Tanglish : kaditham
பார்வை : 88

மேலே