கம்பனை போல கவிதையாவும்
![](https://eluthu.com/images/loading.gif)
கம்பனை போல கவிதையாவும்
எழுதிடத்தான்
கவிதை இளவரசி
உன்னைப்பார்த்ததும் தோணுது !
வெட்கப்பட்டு புன்னகைத்து
தலைகுனிந்து கொள்கிறாய் !
வெட்க முகம் பார்த்து விண்ணுக்கு
இறக்கை இன்றி பறந்து போறதாதான்
தோணுது !
வனப்பு மிகு பெண்மை
பார்த்து வாரி அணைக்க தோணுது
வாசமிகு கூந்தல் நுகர்ந்து -உன் வசமாய்
நாள் முழுதும் இருந்திட தோணுது !
பிரமிடு ஞாபகம்தான்
வந்து வந்து போகுது -என்
மோகம் தணிக்க
நீ முன் பின் எப்பவாவது யோசித்து இருக்கியா
என உங்கிட்ட கேட்கத்தான் தோணுது !
அன்னம் போல நடந்து தான் போற !
அட இது என்னடா
புது அழகு ! என பின்னாடி
பார்த்ததை உன் முன்னாடி வந்து
உங்கிட்ட சொன்னால் !
பிச்சுடுவேன் ! ராஸ்கல் னு நீ திட்டுறத
பார்த்தாலே !
பித்தம் மேற்கொண்டு கிர்னு தான் ஏறுது !
ஆத்தாடி ! நீ ! பொல்லாத ராட்சசி !
கவிதையை இதோட
நிறுத்திக்கிறேன்னு சொன்னால்
முறைச்சு பார்த்தியே
ஒரு பார்வை !
இப்போதே முன்னூறு
கவிதை எழுதி தாரேன்
ஆளை விடு டி !