கிளிகள்
பச்சை வண்ண கிளிகள்
இவைகள் பட்டணத்து கிளிகள்
பட்டுவண்ணகிளிகள்
சிலர் தொட்டுவிட்ட கிளிகள்
மிச்சமுள்ளதெல்லாம்
தப்பிவிட்ட கிளிகள்
நல்ல கூட்டில் வளர்ந்தவிட்ட கிளிகள்,
நவீனம் கற்ற கிளிகள்,
நாகரீகம் மறந்த கிளிகள்,
படித்து வளர்ந்த கிளிகள்
பகுத்தறிவை இழந்துவிட்ட கிளிகள்.
எழுத தெரிந்த கிளிகள்
எனினும் எலிக்கு இரையான
கிளிகள்..!
கிழிந்த உடையில் சில கிளிகள்.
அது யாரை அழைக்கும் மொழிகள்.
விடுதலை அடைந்த கிளிகள்,படிதாண்டிய பத்தினி கிளிகள்,
தன்னில் அழகு தேடும் கிளிகள்,்
தன்னை அறியா கிளிகள்,
அறிவை இழந்துவிட்ட கிளிகள்
அடுத்தவரை போல் வாழ நினைக்கும் கிளிகள்,
பறக்க தெரிந்த கிளிகள்,
பருவத்தில் நடக்ககூட தெரியா கிளிகள்..!
பச்சை வண்ண கிளிகள்
இவைகள் பட்டணத்து கிளிகள் ...!!!