பெண்ணியம்

பெண்ணியம்
****************

பெண்ணியம் என்பது
புரட்சி அல்ல
பெண்ணின் அடையாளம்...

பெண் என்பவள்
தெய்வம் அல்ல...
தேவதை அல்ல...
பெண் என்பவள் பெண்...

நிலத்திற்கும்
நீருக்கும்
மண்ணுக்கும்
மொழிக்கும்
பெண்ணின் பெயரை வைத்துவிட்டு
பெண்ணை வன்மம் செய்வது
எப்படி பெண்ணியம் ஆகும்!?

ஹா ஹா...
நாங்கள் கேட்கவே இல்லை
பொய் ஒழுக்கம்...

முதலில் சென்று உங்கள் தாய் மொழியை சுவாசியுங்கள்...
உங்கள் தாய் மண்ணை மதியுங்கள்...

நீங்கள் யார்
என் உரிமையை தடுப்பதற்கு...
அப்படியானது தான் பெண்ணியம்...

மேலை நாட்டு உடை உடுத்துவதில் இல்லை பெண்ணியம்...

தன் பாதையில் சரியாக
தானே பயணிப்பதே
பெண்ணியம் ...

~ பெண்
பிரபாவதி வீரமுத்து

எழுதியவர் : பிரபாவதி வீரமுத்து (16-Sep-17, 10:31 am)
Tanglish : penniam
பார்வை : 1771

மேலே