கொஞ்சுங் கவிதையிலே

மஞ்சு விரிகையில் விஞ்சு மழகுடன்
மஞ்ஞை நடமிடுதே !
வஞ்சி யவள்முகம் கஞ்ச மலரென
நெஞ்சி லுறைகிறதே !
அஞ்சு விழிகளும் கெஞ்சு மழைப்பினில்
ஒஞ்சி ஒளிகிறதே !
பிஞ்சு விரல்களும் தஞ்ச மடைந்திடும்
கொஞ்சுங் கவிதையிலே !!

எழுதியவர் : சியாமளா ராஜசேகர் (17-Sep-17, 8:28 pm)
பார்வை : 115

மேலே