கவிதை திருவிழா-உரிமையுடன் கோபம் உன்மேல்
நட்பு வட்டம் கொஞ்சம் பெரிதுதான் எனக்கு...அனைவரிடத்திலும் சிரித்து பேசி பழக முடியும் அனால்...
கோபம் மட்டும் உரிமை உள்ளவனிடத்தில் தான் காட்ட முடியும்...
உன் மீது வெறுப்பால் வந்த கோபம் இல்லை இது...உன்னை யாரும் ஏமாற்றி விடக்கூடாது என ஆதங்கத்தினால் வந்த கோபம்...
உனக்கும் தனிப்பட்ட விருப்பு வெறுப்புகள் இருக்கும்... நண்பனாக இருந்தாலும் கூட உன் தனிப்பட்ட விஷயங்களில் தலையிடக்கூடாது என நினைக்க வைக்கிறது ஒரு படத்தில் வந்த இரு வரிகள்...
உன் உரிமை என் மூக்கின் நுனி வரை மட்டுமே மூக்கை தொடுவது இல்லை
கோபமுள்ள இடத்தில் தான் குணமிருக்கும் என்பதை கொஞ்சம் புரிந்துகொண்டு என்னை பொறுத்துக்கொள் என் தோழா