என் ஆருயிர் நண்பனை காணவில்லை

என் ஆருயிர் நண்பனை காணவில்லை :


முக தேர்வில் நடந்த சோதனை
வலிகளும் வடுகளும்
ஆட்கொண்ட பிறகு
வாழ்க்கையே தாரைவார்த்து விட்டேன்
அழுகைக்காக ..

இவ்வளவு நாள் கண்டெடுக்காத கண் - இன்று
உன்னை பார்க்கமாட்டேனா துடித்தது ஏன்

விசிறி செல்லும் பார்வையை இழுத்து
புத்தகத்தின் மேல் பதித்தாலும்
பேனா முனை அடம்பிடிக்கிறது துயில் காற்றுடன்
உன்னை அனுப்ப சொல்லி..

காய்ந்த துணிகளை
ஒருசேர ஒதுக்கி
நடுவில் பிம்பமிடும்
உன் முகத்தை காண ஆவல்

தூரோரம் - உன்
நினைவை சுமந்து
வரைகிறேன் வென்மை தாளில் தளிர் நிறைந்தது உன் நிழலே..

கடைசி வரையிலும் தேடி அலைகிறேன்
கண்களில் கண்ணீரோடு
காணவில்லை
நீ மட்டுமல்ல என் உயிரையும் தான்..

ஏன் என்னை விட்டு பிரிந்தாய் கத்ததோன்றியது..
தேர்வு நேரம் குறைய குறைய உன்னை பார்க்க முடியாமல்
துடித்து போனேன்..

உன் சாடையில் வருபவனை எல்லாம்
நீயேயென்று உற்றுநோக்கினேன்
அவன் பையித்தியம் என்றே என்னை அதட்டி செல்கிறான் ..

ஏன் இன்னும் என் கண்ணில் புலப்படவில்லை என கடவுளிடம் முறையிட
கடைசியில் உன்னை
காண்பித்தான்
கடைசி இருக்கையில்
கடைசியாய் எழுதுக் கொண்டிருந்தாய் தேர்வை - நான்
கடைசி நிமிடம் வரை
உன் நினைவிலே
உன்னையே ரசித்துக் கொண்டிருந்தேன்

சந்தனம் நிற சட்டையில்
புதிதாய் பிம்பமிட்டாய்
என் முன்னே..

உன்னை அள்ளிக்கொள்ள ஆசை
பாவம் என்
வைராக்கியம் தான் என்னை கட்டி போட்டு விட்டதே..

மாடியில் மதுவாய்
என் எதிரே வந்தாய்
என்னை கண்டதும்
பீடம் என நினைத்து
பின்னாடியே நடையெடுத்து விட்டாய்

உன் செய்கையை கண்டதும்
செத்து விடலாம் என்று
எண்ணியது என் செயற்கை மனம்

செத்தாலும் உன்
பெயர் துரத்தும் போல..
எங்கே சென்றாலும்
எங்கே நின்றாலும்
முப்பொழுதும்
மூன்று நிமிடத்திற்கு
ஒருமுறையாவது உன் நாமம் ஒலிக்கும்
பிரித்து போவதற்கு ..

போதும் கிருபா
என்னை செய்ய ஒன்றும் புரியவில்லை எனக்கு
பித்தனாகி போகிறேன்
வாழ்வில் மரணத்திடம்
சண்டையிடுவதாக
அறிகிறேன்

எழுதியவர் : பாக்கியலட்சுமி தமிழ் (20-Sep-17, 1:28 am)
பார்வை : 306

மேலே