என் காதலி

உன் நினைவில்
நான் திரிய,
என் கண்கள் முழுதும்
நிறைந்து வழிபவளே!

உன் உதட்டின் ஓரத்தில்
தொங்கிக் கொண்டிருக்கும்
என் ஆயுளை
புன்னகையால்
உனக்குள் இழுத்து போடடி...

அதிகாலை நேரக் கனவில்
நீ எழும்போது
என் நெற்றியில்
பதித்துவிட்டு போன
முத்தத்தின் ஈரம்
பனித்துளியாய்
படர்ந்திருக்கும்
கனவு கலைந்து போனாலும்....

கதிரவனின் மூச்சுக்காற்று
வெப்பத்தை கூட்ட,
உன்னை ஒட்டி நின்றதினால்
எனக்கு மட்டும் குளுமையடி...

கார் முகில் சூழ்ந்து
மழை பொழிந்தாலும்
உன் முந்தானை
குடைவிரித்து
நான் நினையாமல்
தடுக்கும் அழகில்
சுழற்றி அடிக்கும்
மழையும் கொஞ்சம்
சொக்கித்தான் போகுமடி....

உன் நிழலில்
படுக்கை போதுமடி
உன் மூச்சுக்காற்றின்
தீண்டலில்
உன் நினைவுகளின்
மடியில் உறங்குவேனடி...

உனக்குள் உலவவிட
துடிக்கும்
என் உயிரை
உனக்குள் கட்டிபோடடி,
பாவம், அதன்
ஆயுள் நீளட்டும்......

உன் வாசத்தால்
பேதழித்து அலையும்
என்னை
உன் வேர்வை
துளி தெளித்து
எழுப்பிவிடடி என் உயிரே!

ஊஞ்சலாய் ஆடும்
என் வாழ்வை
நிலையாக்க வந்தவளே!
என் பார்வை
உன் மேல் படும்
தூரத்தில்
நீ இருந்தால் கூட போதுமடி,
தொலைவானையும்
தொட்டு விடுவேன்........

எழுதியவர் : மதிமகள் (19-Sep-17, 10:00 am)
Tanglish : en kathali
பார்வை : 627

மேலே