பாடல் -முஹம்மத் ஸர்பான்

'கன்னத்தில் முத்தமிட்டால்' திரைப்படத்தின் 'ஒரு தெய்வம் தந்த பூவே கண்ணில் தேடல் என்ன தாயே'
என்ற பாடல் ராகத்திற்கும் அதே சூழ்நிலைக்கும் என்னால் எழுதப்பட்ட வரிகள். குறை நிறைகளை விமர்சியுங்கள் அவைகள் என்னை இன்னும் வளர்த்துக் கொள்ள ஆணி வேராய் அமையும்.

(மெல்ல மென்று போகும்
வாடைக் காற்றை போல
கன்னத்தில் முத்தமிட்டால் நீ
கன்னத்தில் முத்தமிட்டால்) 2

பல்லவி
-------------
தவமின்றி பிறந்த நிலவே!
வரமின்றி பிரியும் கனவே!
தவமின்றி பிறந்த நிலவே!
வரமின்றி பிரியும் கனவே!
தாய்மை புகழும் இதம் நீ அன்பே! ஆ....
தாய்மை புகழும் இதம் நீ அன்பே!
வாய்மை இகழும் இடம் நீ அன்பே!
நதியைப் போல நீ நடந்தாயே!
தெருவைப் போல் நான் கிடந்தனே!
காலம் பேசும் தருணம்...,

தவமின்றி பிறந்த நிலவே!
வரமின்றி பிரியும் கனவே!

(மெல்ல மென்று போகும்
வாடைக் காற்றை போல
கன்னத்தில் முத்தமிட்டால் நீ
கன்னத்தில் முத்தமிட்டால்) 2



சரணம் 01
----------------
மூங்கில் பாட்டு நீ!
விதியின் நடனம் நீ!
பேசும் இதயம் நீ!
ஊமை இதழும் நீ!
குறிஞ்சி மலரும் நீ!
சிலுவை முள்ளும் நீ!
குறிஞ்சி மலரும் நீ!
சிலுவை முள்ளும் நீ!
இரவின் ஒளியும் நீ!
பகலின் இருளும் நீ!
இரவின் ஒளியும் நீ!
பகலின் இருளும் நீ!
கண்ணீர் போடும் கோளம் நீ..!

தவமின்றி பிறந்த நிலவே!
வரமின்றி பிரியும் கனவே!

(மெல்ல மென்று போகும்
வாடைக் காற்றை போல
கன்னத்தில் முத்தமிட்டால் நீ
கன்னத்தில் முத்தமிட்டால்) 2



சரணம் 2
--------------
கானல் இன்பம் நீ!
காலை துன்பம் நீ!
மறந்த பாதை நீ!
பிறந்த கவிதை நீ!
புதிரின் புதுமை நீ!
புரியும் இளமை நீ!
புதிரின் புதுமை நீ!
புரியும் இளமை நீ!
செல்வ வானம் நீ!
வறுமை மேகம் நீ!
செல்வ வானம் நீ!
வறுமை மேகம் நீ!
நான் உடைந்து போன உருவம் நீ..!

தவமின்றி பிறந்த நிலவே!
வரமின்றி பிரியும் கனவே!
தவமின்றி பிறந்த நிலவே!
வரமின்றி பிரியும் கனவே!
தாய்மை புகழும் இதம் நீ அன்பே!
தாய்மை புகழும் இதம் நீ அன்பே!
வாய்மை இகழும் இடம் நீ அன்பே!
நதியைப் போல நீ நடந்தாயே!
தெருவைப் போல் நான் கிடந்தனே!
காலம் பேசும் தருணம்

தவமின்றி பிறந்த நிலவே!
வரமின்றி பிரியும் கனவே!

எழுதியவர் : முஹம்மத் ஸர்பான் (19-Sep-17, 11:04 am)
பார்வை : 206

மேலே