காதல்
பிரியாத அழகு ஒன்று என்னை வாட்டும் போது
கண்கள் இமை மூட மறுக்கிறது
என் இமைகள் வரையும் ஓவியம் நீயாகிறாய்
உன்னை பார்த்த ஒவ்வொரு நொடியும் உதடுகள்
துடிக்கிறது உன் அரவணைப்பில் வாழ ஆசை என சொல்ல
சொல்லிய வார்த்தைகள் உன்னை அடையும் முன்பே
உன் புன்னகை என்னை ஆட்கொள்கிறது
உன்னுள் புதைந்த பினிபே
உணர்கிறேன் உனக்காக பிறந்தவள் என்று
அன்பே