நட்பு -- தற்கால பிரிவு

நம் நட்பு என்பது வாடா போடா என்று
பேசி கொள்ளும் அளவுக்கு அல்ல

நம் மனம் வாடாமல்
நடந்து கொள்ளும் அளவுக்கு !!

இக்கவிதையை படைத்தேன்
உனக்காக

நீ ரசிப்பாய் என்றல்ல
நான் ரசிக்கப்பட்டவனில்

நீ ஒருவனாய்
என்றும் இருந்ததனால்

கடவுளுக்கும் நன்றி
சொல்லி கொள்கிறேன்

இத்தருணத்தில்

உன்னை எனக்கு நண்பணாய்
அடையாளம் காட்டியதற்கு

என்னிடம் கொடுப்பதற்கு
ஒன்றுமில்லை

நட்பை தவிர

உன்னிடம் இருந்து நிறைய
எடுத்து கொள்கிறேன்

நல்ல பண்புகள் பலவற்றை
உனக்கு தெரியாமலே

ஒரு நாள் வெற்றி பெறுவாய்
அன்று
ஆனந்தப்படுவேன் முதல் ஆளாய்

நாம் இனிமேல் பேசுவதோ
அத்தி பூத்தாற் போல

சந்திக்க போவதோ
குறிஞ்சி பூத்தாற் போல

ஆனால் என் நினைவுகள்
என்றும் என் மனதில் இருக்கும்
தினம் உதிக்கும் சூரியனைப் போல

எழுதியவர் : senthilprabhu (20-Sep-17, 1:32 pm)
பார்வை : 404

மேலே