நட்பின் வலி

உன்னிடம் மாற்றம்
கண்டாலும்
மனதை மாற்றி கொள்ள
முடியவில்லை....

உன்னிடம் விலகல்
கண்டாலும்
விலகி செல்ல முடியவில்லை ...

உன்னிடம் பிரிவை
கண்டாலும்
பிரிந்து செல்ல முடியவில்லை...
நாம்
பிரிவதும், பிரிந்ததும்
நிஜம் என்றாலும்

மறக்க முடியாத
நினைவுகளோடும்
மறைக்க முடியாத
வலிகளோடும்
தொடரும்
என் நட்பு ...

எழுதியவர் : பாரதி (21-Sep-17, 2:32 pm)
Tanglish : natpin vali
பார்வை : 867

மேலே