சிறைக்கைதி

சண்டை போட்டதை
நினைத்து பார்க்கும்
என் நினைவிடம்
சொல்கிறேன்
அவள் புன்னகை
குற்றால சாரல் என்று...

கோபத்தை நினைவூட்டும்
நிகழ்விடம் சொல்கிறேன்
அவள் இடை
காற்றில் ஆடும் கொடி என்று...

சினம் கொண்ட
வார்த்தைகளை சீறிப்பார்க்கும்
சிந்தையிடம் சொல்கிறேன்
அவள்
தேகம் புல்வெளி என்று...

எதுவாயினும்
தவறு செய்யாமலே
தண்டனை பெரும்
சிறை கைதியாகிவிட்டேன்
நித்தம் அனுபவிக்கும்
அவள் நினைவுகளால்...

என்றும்... பத்மாவதி.

எழுதியவர் : பாரதி (21-Sep-17, 3:02 pm)
பார்வை : 121

மேலே