நானும் மறந்தேன் நீயும் மறந்தாய்

ஊண் உறக்கம் மறந்தேன்
உலகை மறந்தேன்
கற்க மறந்தேன்
பெற்ற தாய் தந்தை மறந்தேன்
அனைத்து உறவுகளையும் மறந்தேன்
உனக்காக....
நீயும் மறந்தாய்
நான் உனக்காக மறந்தையெல்லாம் மறந்தாய்
உன் மீது நான் கொண்ட காதலை மறந்தாய் இறுதியில் என்னையும் மறந்து விட்டாய்
மறதி வாழ்க்கைக்கு தேவை தான்
உன் மறதி உயிர் இருந்தும் ஜடமாக மாற்றி விட்டது என்னை.
என்னை மறந்தது போல் நீ தேடிய புது உறவையும் மறவாதே
என் நிலை இன்னொரு பெண்ணிற்கு வேண்டவே வேண்டாம்

எழுதியவர் : அனுஷா (21-Sep-17, 3:31 pm)
பார்வை : 660

மேலே