மழைமகள் மீது மையல்

நீ உமிழும் நீர்துளிகள் உதடுகளை உரசியதும்;
உடல்முழுதும் உருகுதடி உன்னழகை தீண்டிடவே;
தீண்டாமை தீமையென்று திருமகளே தெரியுமன்றோ;
நீ திண்டாது சென்றுவிட்டால் தீயுமிழும் தேகமன்றோ;
நறுமணமாய் உன்வாசம் நாசிகளை துளைக்கையிலே;
நரம்பணைத்தும் துடிக்குதடி நாடியோடு இணைந்தபடி;
நாந்தொட்டு பூசையிலே நீயிட்டமுனகல் மொழி;
காட்டுகுயில் கானமென்றே காதருகில் கேட்குதடி;
மாரியெனும் பேர்படைத்த மங்கையே மழை மகளே;
#இப்படிக்குபூமி

எழுதியவர் : சுரேந்திரன் (21-Sep-17, 7:04 pm)
பார்வை : 180

மேலே