ஒரு கடிதம் எழுதினேன் -- நிலைமண்டில ஆசிரியப்பா

ஒரு கடிதம் எழுதினேன் -- நிலைமண்டில ஆசிரியப்பா


கடிதம் ஒன்றினை கடிதினில் எழுதினேன்
விடியும் காலையில் விரைந்துமே வருகவே !
மிடிகள் போக்கி மின்னல் போலவும்
அடிதனை எடுத்தே அன்னமாய் நடைதனில்
வடித்தச் சிற்பம் வாட்டம் போக்கவே
மடிதனில் கிடத்தி மார்பில் சாய்ந்திட
முடிந்த வாழ்வில் முத்தமும் பதிக்கவும்
படிவாய் மன்னவா பதியாய் என்றுமே !

ஆக்கம் :- சரஸ்வதி பாஸ்கரன்

எழுதியவர் : சரஸ்வதி பாஸ்கரன் (21-Sep-17, 9:00 pm)
பார்வை : 104

மேலே