காதல்

இங்கு அன்பு. விற்பனைக்கு அல்ல...
என் பிரியமான நேசம்
என் பிரியமான அன்பு
என்னால் தேவைக்கு அதிகமாகவே
உனக்கு கொடுக்கப்பட்டது
என் பிரியா ...... என் உயிரின்
இறுதி துளி இரத்தம் கூட‌
என் கலப்படமில்லாத‌
எண்ணிலடங்கா அன்பை
உனக்கு வாரி வழங்கும்...
ஆனால் விலகி செல்ல நினைக்கையில்...
நீ என்னை
என் அன்பை
திரும்ப தர நினைத்தால்
தூக்கி எறிந்து விட்டு செல்லாதே...
நீ எறிந்தால்
கடலில் கரையும் உப்பாக‌
அவ்வன்பு என்னில் கரையாது...
நீ எறிந்து சென்ற
இடத்தை ஒருமுறை திரும்பிபார்...
பேருந்தின் அடியில் சிக்கி
உயிருக்காக துடிக்கும்
உயிராய் என் அன்பு.........
புகை வண்டியில் அடிப்பட்டு
சிதறிய உடலாய்
என் அன்பு துடிக்கும்........
ஏற்கும் போது சிசு உருவாகும் கருவாய்
என்னுள் நகம் தொட்டு,
என் விரல் தொட்டு,
சிறுக சிறுக என் மொத்த அன்பையும்
சுரண்டி எடுத்தாய்...
திரும்ப தரும்பொழுது
அப்படியே தாயேன்...
இந்த அன்பு
இந்த தரணியில்
இன்னும் கொஞ்ச நாட்கள்
வாழட்டுமே...
எறிந்து விட்டு செல்லாதே
இங்கு அன்பு விற்பனைக்கு அல்ல‌
அழிப்பதற்கு அல்ல‌.....
ஆள்வதற்கு மட்டும்... _Subha Prabhu

எழுதியவர் : Subha prabhu (21-Sep-17, 8:21 pm)
Tanglish : kaadhal
பார்வை : 298

மேலே