ஏங்கும் மனம் தூங்காது

சந்தன மரமது சூறா வளியால் சூறை யாடப்பட்டு தரை சாய்ந்தபோதிலுமதன்
மகத்துவம் அழிவதில்லை ||

சிங்கம் முதுமை எய்தி னாலு மதன் சீற்றம் குறைவதில்லை ||

கரும்பு காய்ந்தாலு மதன்
மதுரம் மாய்வதில்லை ||

உயர்ந்த இடத்தில் பிறந்தோர் தாம் தாழ்ந்த நிலையை யடைந்த போதும்
மனநிலை மாறுவதில்லை
ஏங்கும் மனம் தூங்காது ||

எழுதியவர் : Abraham Vailankanni (22-Sep-17, 7:36 pm)
பார்வை : 144

மேலே