மயக்கம் என்ன
மலர்ந்தும் மனம் பரப்பா மலர்களே!
மரண மயக்கதிலிருந்து
மீண்டு வாருங்கள்.
மலைகளைத் தாண்டி மணம் பரப்புங்கள்.
ஓடைகளின் தாடைகளில் மோதி
தண்ணீரில் தள்ளடுங்கள்.
சருகுகளாய்ச் சரிவதற்கு முன்
சிந்தையைச் செதுக்குங்கள்.
துயரங்களை துரத்துங்கள்.
கோபங்களைக் கோடாரியால் வெட்டுங்கள்.
முயற்சியை உரமாக்கி
நல்லாசைகளை விதையுங்கள்.
விளைந்திடும் வேலையில்
யாரேனும் வெட்டிட எண்ணினால்
முட்டி எறியுங்கள்.
மோதிய வேகத்தில்
திசை தெரியாமல்
தெறித்து ஓடட்டும்.
ஓய்வுகள் ஓயட்டும்.
உறக்கங்கள் உறையட்டும்.
இளைப்பாற எண்ணி
ஏமாறாமல் என்ன
சாதித்தோம் என எண்ணுங்கள்.
தாழ்ந்ததாய் எண்ணி
வீழ்ந்து விடாமல்
வாழ்வின் சிறப்பை
வளைத்துப் பிடியுங்கள்.
உலகம் உயர்த்தட்டும்.