திருநங்கை அவள்

ஆணும் பெண்ணும் சமம்
என்கிறது அவளது
பேச்சுப் போட்டியின் தலைப்பு
பேசுவதற்காக கூட்டத்துள்
நுழைய முற்படுகிறாள்
முன்னே ஒரு
உருவம் நிற்கிறது
ஆணும் பெண்ணும்
சரிபாதியாக சமமாக கலந்த
திருநங்கை அவள்
கண்கள் விரிகிறது
புருவங்கள் நெரிகிறது
அவளை ஒதுக்கி விட வேண்டுமென
ஒதுங்கி ஒதுங்கி செல்கிறாள்
மேடையில் ஏறி
அனைவரும் ஒன்றென
பேசி முடிக்கிறாள்
பல்லாயிரம் கரவொலிகள்
காற்றோடு
சமத்துவம் இங்கே
கண்ணீரோடு

எழுதியவர் : சந்தியா (23-Sep-17, 7:38 pm)
Tanglish : thirunangai aval
பார்வை : 99

மேலே