கம்ம்யூனிஸ்ட் கைகள்

கூட்டத்தின் ஓரத்தில்
கிழிந்த ஆடையை
கஷ்டப்பட்டு மறைத்து
கூனிக்குறுகி நின்ற
ஒரு ஏழையையைப்
கண்ட நாளில்
சமுதாயத்தின் மேல்
சட்டென்று கோபம்கொண்ட
சத்தியமான கம்யூனிஸ்ட்
சிந்தனை கொண்ட
தையல்காரர் ஒருவரின்
துடித்த கைகளும்
கோபம்கொண்ட கண்களும்
தான் கட்டாயம்
வடிவமைத்திருக்க கூடும்
இந்த ஆடைகளை ...

கிழிந்தே இருக்கும்
நவீன ஜீன்ஸ் பேண்ட் !!!

எழுதியவர் : சஹாயா சாரல்கள் (24-Sep-17, 3:10 am)
பார்வை : 338

மேலே