மலைமகள்--அலைமகள் துதிப் பாடல்
மலைமகள் துதிப் பாடல்...
மனிதரும் தேவரும் மாயா முனிவரும் வந்து சென்னிக்
குனிதரும் சேவடிக் கோமளமே கொன்றைவார் சடைமேல்
பனிதரும் திங்களும் பாம்பும் பகீரதியும் படைத்த
புனிதரும் நீயும் என் புந்தி எந்நாளும் பொருந்துகவே
அலைமகள் துதிப் பாடல்...
நீங்காது நின்மகனும் நீண்ட திருமாலும்
பாங்காக அன்றுவந்த பாற்கடல்போல் தேங்காமல்
நன்றாக நீயிருந்து நாளும் வளம் பெருக்கி
என்றைக்கும் நீங்காதிரு கலைமகள் துதிப்பாடல்...
மண்கொண்ட வெண்குடைக் கீழாக மேற்பட்ட மன்னரும் என்
பண்கண்ட அளவில் பணியச் செய்வாய் படைப்போன் முதலாய்
விண்கண்ட தெய்வம் பல்கோடி உண்டேனும் விளம்பில் உன்போல்
கண்கண்ட தெய்வம் உளதோ சகலகலா வல்லியே