என் உயிரினும் மேலான நெடுந்தொடர் - - - பாகம் 71

இன்று................

"காயத்ரி.....நான் என் பிரவீனை கொன்னுட்டேன் டி, அவன் என்னை உயிரா நெனச்சான், என்னிக்கு நான் அவனை விட்டு பிரிஞ்சுட்டேன் னு உணர்ரானோ அன்னிக்கு என் உயிர் போய்டும் னு சொன்னான் டி, அதேமாதிரி செஞ்சுட்டான் டி" விஜியால் தான் செய்த தவறை ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

"இப்பவாச்சும் சொல்லு டி, என்ன தான் நடந்துச்சு, பேசு விஜி, உன்னோட இந்த முட்டாள் தனம் ஒரு உயிரை குடிச்சுருச்சு டி, அதுவும் கிடைக்கத்தக்க உயிரா டி அது, பிரவீன் டி......இந்த உலகத்துல எல்லாரைவிட முக்கியம் னு பேசினியே, உன்னோட ரோல் மாடல், அவன் இல்லன்னா நீ இல்லைன்னு சொன்னியே, என்ன டி பண்ணின, அவன் உயிர் போற அளவுக்கு என்ன டி பண்ணின, சொல்லித்தொலை டி" என்றாள் காயத்ரி.

"அவன் இவ்ளோ பலவீனமா இருப்பான் னு நான் கனவுல கூட நினைக்கல டி, அவன் என்னை உயிரா நெனச்சிருக்கான், நானும் தான் டி நெனச்சேன், என்னால அதை காட்ட முடில, அப்டி ஒரு புதைகுழி ல விழுந்துட்டேன் டி, ஆகமொத்தத்தில் என் பிரவீன் என்னை விட்டு போய்ட்டான், கடவுள் அவனை கூட்டிக்கிட்டாரு டி, அவனை காதலிச்ச என்னை ஆயுதமா வெச்சே அவன் உயிரை பறிச்சுட்டான் டி" என்றாள் விஜி.

"விஜி, இப்போ என்ன நடந்துச்சுன்னு சொல்லபோறியா இல்லையா, ஏப்ரல் 14 மத்தியானம் நீ எனக்கு போன் பண்ணும்போது கூட ப்ரபோஸ் பண்ண தான் போறேன்னு சொன்ன, அப்புறம் தான் ஏதோ நடந்திருக்கு.சொல்லு விஜி, என்ன நடந்தது" என்றாள் காயத்ரி.

விஜி பேச ஆரம்பிப்பதற்குள் நர்கீசின் போனுக்கு ஒரு அழைப்பு வர, முபாரக் பேசினான், "நர்கீஸ், இன்னும் ஒரு மணி நேரத்துல நாங்க பார்மாலிட்டீஸ் முடிச்சுட்டு பிரவீன் வீட்டுக்கு வந்துருவோம், நீ விஜி காயத்ரியை கூட்டிட்டு வந்துடு" என்றான் முபாரக்.

"மாமா, எப்படி ஆச்சுன்னு......" நேர்கீஸ் தடுமாறினாள்.

"இன்னும் புல் ரிப்போட் வரல, முதல் கட்ட ரிப்போட் ல பிளட் பிரஷர் அதிகமாகி மூளைக்கு போற ஆர்ட்டெரி ல பர்ஸ்ட் ஆகி ஹீமோரேஜ் ஆயிருக்கு, அப்டின்னு சொல்றாங்க, நீங்க கெளம்பி வாங்க" என்று இங்கே பேசிக்கொண்டே அங்கே, "விஜய், பிரவீன் வீட்ல இருக்கறவங்க எல்லாருக்கும் சொல்லு,இன்னும் ஒன் அவர் ல பிரவீன் பாடியோட வரோம் னு" என்றான் முபாரக்.

"சரி, காயத்ரி, இந்த நிலைமை ல விஜிகிட்ட கோவப்பட்டு அவளை இன்னும் டாச்சர் பண்ண வேண்டாம், நீங்க கிளம்புங்க, பிரவீன் வீட்டுக்கு போகணும், " என்றாள் நர்கீஸ்.

"என்ன டார்ச்சர் அக்கா, பிரவீன் இப்போ செத்துபோய்ட்டான் அதுக்கு இவ தான் காரணம்" என்றாள் காயத்ரி.

"காயத்ரி, அவனுக்கு ப்ரெய்ன் ல ஏதோ பிளட் வெச்செல் பர்ஸ்ட் ஆகி உயிர் போய் இருக்கு, சும்மா விஜியை டார்ச்சர் பண்ணாத, இப்போ நீ என்ன பேசி என்ன ஆக போகுது, வா பேசாம, வா விஜி, நீ மனச போட்டு கொழப்பிக்காத" என்றாள் நர்கீஸ்.

காரை நர்கீஸ் ஓட்ட, காயத்ரி முன்னால் அமர்ந்துகொண்டாள், பக்கத்துக்கு வீட்டில் இருக்கும் ஆட்களிடம் "பசங்க வந்தா கொஞ்சம் பாத்துக்கோங்க, ஒரு போன் பண்ணுங்க நான் வந்துடறேன்" என்றாள் நர்கீஸ்.

கார் பிரவீன் வீட்டை நோக்கி வந்தது.

பிரவீனின் வீட்டை அடைந்ததும், விஜிக்கு பிரவீனின் வீட்டில் தான் இருந்தது, அவனது அரை, விஜியை பற்றி அவன் எழுதிய நோட்டுப்புத்தகம், அவளுக்கு அவன் சமைத்து கொடுத்த உணவு, அவன் பேசும் விதம், அவன் எப்படி எல்லாம் விஜியை பார்த்துக்கொண்டான், எப்படி எல்லாம் கேர் செய்தான் என அனைத்தும் அவள் மனதில் நிழலாய் ஓடியது.

ஒவ்வொரு இடத்திலும் பிரவீனின் பிம்பம் விஜியின் மனதில் தெரிந்தது. அவள் கண்கள் கலங்கியது நிறுத்தவே இல்லை. அப்போது கூட பிரவீனின் குரல் அவள் மனதில் "அழாத விஜி, நான் எங்கயும் போகல, உன்கூட உன் மனசுல தான் இருக்கேன், எப்போ வேணாலும் என்னை எழுப்பி நீ பேசலாம், நீ அழுதா என்னால தாங்கிக்க முடியாது டா" என ஒலித்தது.

மனதில் மாயையாய் தோன்றி தோன்றி மறைந்தான் பிரவீன்..

பிரவீன் அவனது அறையில் வைத்திருந்த அவனது போட்டோவை பார்த்து அதனோடு மனதிற்குள் பேசினாள் விஜி.

"உன்னை லவ் பண்ணலன்னு சொன்னேன், தப்பு தான் டா, உன்னை எவ்ளோ கஷ்டப்படுத்தினேன், நீ என்னை விட்டு போகணும் னு எனக்கு எண்ணம் இல்ல டா, நீ இல்லன்னா நான் இல்ல டா, ஆனா அப்டி ஒரு சூழ்நிலை ல தள்ளப்பட்டுட்டேன் டா, உன்னோட வாழனும், உன்னை கல்யாணம் பண்ணிக்கணும் உன்னை அவ்ளோ லவ் பண்ணனும்..............என் கனவுகள் என் ஆசைகள் எல்லாம் எனக்குள்ளே புதைச்சுகிட்டு உன்னை கஷ்டப்படுத்தினேன். நீ என்னை மறக்கணும் னு தான் டா ஆசை பட்டேன், உன்னை அழிக்கணும் னு இல்ல, சாத்தியமா உன்னை நான் கொன்னுட்டேன் னு நினைக்கும்போது என்மேலேயே எனக்கு அருவருப்பா இருக்கு டா, உன்னை போல ஒரு உயிர் எனக்கு யாரு டா........என் மடியில உன் உயிர் போகணும் னு சொல்லிட்டு அப்டியே போய்ட்டியே டா, இந்த உலகத்துல என்னை தனியா விட்டுட்டு போய்ட்டியே,எனக்குன்னு யாரு டா இருக்கா, நீ உன்னோட உயிரை தான் விடப்போறான்னு தெரிஞ்சிருந்தா கண்டிப்பா உன்னை ஹர்ட் பண்ணிருக்க மாட்டேன் டா. நீ எனக்கு வேணும் டா, திரும்பி வா டா, பிரவீன், வா டா, உன்னை இனிமே ஹர்ட் பண்ண மாட்டேன் டா, ப்ளீஸ், பிரவீன், நீ இன்னும் சாகல டா, வா டா, உன் விஜி கூப்பிடறேன் டா, வா டா, ஐ லவ் யு டா பிரவீன், வா டா"விஜியின் மனம் குமுறியது.

பிரவீனின் பிம்பம் மட்டுமே விஜியை பார்த்து சிரித்தது.

"நீ என்னை கஷ்டப்படுத்தும் ஒரே விஷயம் மரணம் னு சொன்னியே டா, அப்டியே பண்ண வெச்சுட்டேனே, நீ என் பிரிவை உணர்ந்தா உன் உயிரை விட்டுடுவேன்னு சொன்ன டா நீ, நான் தான் புரிஞ்சுக்கல டா, என்னோட இந்த ஹேஸ்ட் டெசிஷன் என்னோட இந்த னீச்சரணால பெரிய இழப்பு வரும் னு சொன்னியே, இப்படி உன்னையே இழந்துட்டு இப்படி தனி மரமா நிக்க வெச்சுட்டியே பிரவீன், வா டா, நான் உன் விஜி டா, உன்னோட விஜி டா, நீ தான் டா என் உயிர், நீ தான் டா என் பிரவீன், வா டா, வா டா, ப்ளீஸ் வா டா, பிரவீன்.....ஐ லவ் யு டா" கதறி கதறி அழுதாள் விஜி.

பத்து பதினைந்து நிமிடம் கழிந்திருக்கும். அமார் ஊர்தி ஒன்று வந்து வாசலில் நின்றது.

அதிலிருந்து பல கூறுகலாகி மீண்டும் சேர்த்து வெள்ளை துணியால் சுற்றப்பட்ட பிரவீனின் உயிரற்ற உடல், இறக்கி பார்வைக்கு வைக்கப்பட்டது, தூங்குவது போலவே தான் இருந்தது, ஆனால் மூச்சு இல்லை, இதய துடிப்பு இல்லை, உணர்வுகள் இல்லை, ஒரு சிறிய பையில் அவனுடைய பொருட்கள் முபாரக் எடுத்து வந்து விஜியின் கையில் கொடுத்தான்,"இந்தா விஜி, இது நீ கொடுத்தது தான், இனிமே இதை போட்டுக்க உன்னோட பிரவீன் இல்லை, எனக்கு தெரியும், நீயும் அவனை லவ் பண்ணினன்னு, உன்கிட்ட வந்து உன்னோட பிறந்த நாள் அன்னிக்கு வந்து நான் பேசறதா தான் இருந்தேன், பேசி இருந்தா உன்னோட பிரச்சனை என்னன்னு நான் தீத்துவெச்சுருப்பேன், ஆனா இந்த பிரவீன், உன்னோட சந்தோசம் முக்கியம் உன்னை மீட் பண்ணி கோவப்படுத்தி கஷ்டப்படுத்தவேணாம் னு சொன்னான், பிரவீன் பத்தி எல்லாம் புரிஞ்சுக்கிட்ட எனக்கு இப்படி செத்துப்போய் ஒரு வெள்ளை பார்சலா வருவான் னு தெரியாம போச்சு விஜி. " என்று கூறிவிட்டு சென்றான்.

வீட்டின் ஒரு மூலையில் உட்கார்ந்து ஓ வென அழத்தொடங்கினாள் விஜி. காயத்ரி அவள் அருகே சமாதானப்படுத்த முயற்சி செய்தாள்.

"ஐயோ, என் பிரவீன் இனிமே எப்போ நான் பாப்பேன், டேய் எழுந்திரு டா, எழுந்திரு,, நான் உன்னை போக விடமாட்டேன். என்னை மன்னிச்சுரு டா, நீ தான் எனக்கு முக்கியம் டா, எழுந்திரு டா. என் உயிரே ஒரு பொட்டலமா என் முன்னாடி கெடக்கே, எனக்கு அழாதன்னு அட்வைஸ் பண்ணுவியே, உன்னோட விஜி அழறேன் டா, எழுந்து அழாதன்னு சொல்லு டா, நான் அழுதா உனக்கு கஷ்டமா இருக்குமே என்னை கஷ்டப்படுத்தாத டா, எழுந்திரு டா, பிரவீன் வா டா, இனிமே உன்னை விட்டு போகமாட்டேன் டா, உன்மேல கோவப்படமாட்டேன் டா, நான் தப்பு பண்ணிட்டேன் டா, மன்னிச்சுரு டா" என்றபடி அந்த வெள்ளை துணியால் கட்டி இருந்த உடலை உலுக்கினாள் விஜி.

"விஜி, உள்ள எல்லாம் துண்டு துண்டா இருக்கும், உலுக்காத" என்றபடி நர்கீஸ் விஜியை தூக்கி நகர்த்தினாள்.

"என் பிரவீனை துண்டு துண்டா ஆகி போட்ருக்கேன், ஐயோ, என்ன பாவம் பண்ணினேனோ நான், டேய், நீ சாகவேண்டியவன் இல்ல டா, நான் தான், பிரவீன், ப்ளீஸ் டா, வாடா" என்று கதறினாள் விஜி.

இறந்த ப்ரவீனால் விஜியின் கண்ணீரை துடைக்க முடியவில்லை.

சேர்ந்து வாழ கனவுகள் கண்டு நினைவில் பிரவீனை கணவனாகவே எண்ணி வாழ்ந்த விஜி பிரவீனின் மரணத்திற்கு தான் தான் காரணம் என்று அனைவரும் தூற்றும்போதும் அதற்கான காரணத்தை சொல்லமுடியாமல் தன் கண்ணீரால் தன்னை ஆற்றிக்கொண்டிருக்கிறாள். எப்படி முடியும்? ஏதோ ஒரு காமத்தில் பிறந்த ஈர்ப்பு அல்லவே.......கண்ணில் தோன்றி இதயத்தில் முற்றி மனமார காதலித்தவன் மரணமடைந்து தன் கண்முன்னே பிணமாக கிடைக்கும்போது விஜியின் மனம் எப்படி சாந்தப்படும்? தனது கண்ணீரை பிரவீன் உணர்வான், அவனது ஆத்மாவிற்கு தெரியும், விஜியின் காதலின் ஆழம்....இவர்களின் தூற்றுதலுக்கு என்ன தான் காரணம் சொன்னாலும் அதை அவர்கள் ஏற்பார்களா.....ஏற்றாலும் பிரவீனின் மரணம் தானே நிதர்சனம்.......ப்ரவீனோடு வாழ்ந்த கனவு வாழ்க்கை கூட அஸ்தமனம் ஆனதை உணர்ந்தாள் விஜி....மெல்ல அவன் உயிரற்று கிடக்கும் சடலத்தின் அருகே வந்து "என்னை விட்டுட்டு போய்ட்டியா பிரவீன், நீ இல்லாம நான் எப்படி டா வாழ்வேன்? என்னை அணு அணுவா புரிஞ்சு வெச்சுருக்கேன் னு சொன்னியே....உன்னை பிரிய எனக்கு மட்டும் என்ன டா ஆசையா......நீ இல்லாம நான் எப்படி டா இருப்பேன், நீ தான டா எனக்கு எல்லாம்.......என்னை அனாதையா விட்டுட்டு போய்ட்டியே டா......நான் தான் உன்னை கொன்னுட்டேன் இல்ல டா?என்னை நீ உயிரோட கொன்னுட்ட டா.....தூங்கற மாதிரியே இருக்கியே டா, எனக்காக எழுந்திரு டா, பிரவீன், வா டா, என்னை கல்யாணம் பண்ணிக்கோ டா, உன் விஜி கூப்பிடறேன் டா, என்னை மன்னிச்சு ஏத்துக்கோ டா....டேய்,....இவ்ளோ பெரிய தண்டனை எனக்கு வேணாம் டா, நீ என்னை விட்டு பிரிஞ்சு போகணும் னு தான் நெனச்சேன், அதுக்கான காரணம் உன்கிட்ட சொல்ல முடியல டா, நீ பிரிஞ்சாலும் உன்னை தினம் பாத்து பேசி உன்னோட மனசளவுல வாழனும் னு தான் விரும்பினேன், ஐ லவ் யு டா.....எழுந்திருக்க மாட்டியா டா, உன் விஜி கூப்பிடறேன், என்னை கஷ்டப்படுத்த மாட்டேன் னு சொன்னியே ட, நீ இல்லாம நான் கஷ்டப்படுவேன் டா, பிரவீன்......." என்று மனதில் நினைத்தபடியே அவன் முகத்தை இமைக்காமல் கலங்கிய கண்களோடு பார்த்தாள் விஜி. பிரவீன் என்ற ஒரு ஜீவன் இனி இல்லை என்பதை அவளால் நம்பமுடியவில்லை. பிரவீனின் நெற்றியில் முதன்முறையாக முத்தம் இட்டாள் விஜி. அதை உணர தான் பிரவீனின் உயிர் இல்லை. உனக்கு நான் கொடுக்கும் முதல் முத்தமே உன் மரணத்திலா டா இருக்கணும்....பிரவீன், எனக்கு மன்னிப்பே இல்லையா டா....."என்று மனதிற்குள் எண்ணி பொருமி பொருமி அழுதாள் விஜி. விஜி கண்ணீரை அருகில் இருந்தும் முதன்முறை ப்ரவீனால் துடைத்து அவளை தழுவி ஆறுதல் கூறாமல் உயிரற்று சவமாய் இருந்தான் பிரவீன்.

சற்று நேரத்தில் மயங்கியும் விட்டாள் விஜி.

மயக்கம் தெளிந்து எழுந்திருக்கும்போது அங்கே அவளுக்கு முன்னால் பிரவீன் சிரித்தபடி நின்றிருந்தான்.

நிஜத்தில் அல்ல, புகைப்படத்தில் மாலை இடப்பட்டு.

அவளுக்கு முன்னால் நர்கீஸ், முபாரக், காயத்ரி மூவரும் மட்டுமே இருந்தனர். விஜயும் ரியாஸும் எல்லா அறைகளையும் தண்ணீர் ஊற்றி கழுவிக்கொண்டிருந்தனர்.

"அண்ணா, பிரவீன்...." என்றாள் விஜி.

"எல்லாம் முடிஞ்சுது விஜி, எரிச்சாச்சு" என்றான் முபாரக். அவன் கண்களில் இருந்து கண்ணீர் ஊற்றியது.

"இனிமே என் பிரவீனை பாக்கவே முடியாதா அண்ணா" என்று அழுதாள் விஜி.

"விஜி, எல்லாம் முடிஞ்சுபோச்சு விஜி, நீ வீட்டுக்கு போ, நான் நாளைக்கு உன்கிட்ட பேசறேன், காயத்ரி, இன்னிக்கு புல்லா நீ விஜி கூட இரு, நாளைக்கு காலைல ஒன்பது மணிக்கு நான் கூட்ரோடில வெய்ட் பண்றேன், அங்க பேசிக்கலாம், விஜிகிட்ட நைட் எதுவும் பேசி தொந்தரவு பண்ணாத......புரியுதா, அவளை போட்டு டார்ச்சர் பண்ணினா மட்டும் பிரவீன் வந்துர போறானா......"கண்களை துடைத்தபடி கூறினான் முபாரக்.

"டேய், நான் விஜி காயத்ரி ரெண்டு பேரையும் அவங்க வீட்ல டிராப் பண்ணிட்டு வரேன், நீ நர்கீச வீட்ல விட்டுட்டு கிளம்புங்க, பிரவீன் வீட்டை பூட்டி சாவிய எதுத்துட்டு போ நர்கீஸ்" என்றான் முபாரக்.

அனைவரும் வெளியே சென்று பிரவீனின் வீடு அவனது நினைவலைகளுடன் நிரந்தரமாக பூட்டப்பட்டது.

கார் விஜி மற்றும் காயத்ரியை ஏற்றிக்கொண்டு விஜியின் மனம் முழுதும் பிரவீனின் நினைவுகளோடு வளவனூருக்கு பயணப்பட்டது.


பகுதி 71 முடிந்தது.

-----------------------தொடரும்-------------------------

எழுதியவர் : ஜெயராமன் (24-Sep-17, 8:03 pm)
பார்வை : 296

மேலே