என் உயிரினும் மேலான நெடுந்தொடர் - - -இறுதி பாகம்
விஜி வார்த்தைகள் இன்றி மௌனமாய் வந்தாள். அந்த காரில் இதுவரை விஜி சந்தோஷத்தை தவிர எதையும் அனுபவித்ததில்லை, முதன்முறை பிரவீன் இல்லாமல் அந்த கார் விஜியோடு பயணித்தது, அவள் கையில் ப்ரவீனுக்கு தான் அளித்த பாரெவர் வித் யூ டீஷிர்ட் மட்டும் வைத்திருந்தாள். அவளுடைய கைப்பை காயத்ரி வைத்திருந்தாள்.
"காயத்ரி, நீ விஜி வீட்டுக்கு போன் பண்ணி பக்குவமா விஷயத்தை சொல்லு, விஜி, வீட்ல போய் பிரவீனை லவ் பண்ணினேன், அப்டி இப்படின்னு அழாத, பியூச்சர் லைப் உனக்கு இருக்கு, புரியுதா" என்றான் முபாரக்.
"அண்ணா, எப்படி அண்ணா உங்களால இப்டி பேச முடியுது, இன்னிக்கு காலைல நம்ம கூட இருந்த பிரவீன், இப்போ காத்தோட காத்தா கலந்துட்டான், இந்த விஜி அவன் இருக்கும்போது எவ்ளோ ஹர்ட் பண்ணி அவனை கொன்னுட்டா, அவளோட பியூச்சர் னு பேசிட்டு இருக்கீங்க" என்றால் காயத்ரி.
"காயத்ரி, எல்லாம் எனக்கு தெரியும், பேசாம சொல்றத செய், ரம்யாக்கு போன் பண்ணு" என்றான் முபாரக்.
"ரம்யா போன் லைன் கிடைக்கல அண்ணா" என்றாள் காயத்ரி.
"சரி, விஜி வீடு லேண்ட் லைன் கு போடு" என்றான் முபாரக்.
"சரி" என்றாள் காயத்ரி.
"யாரு போன் எடுத்தாலும் என்கிட்டே குடு" என்றான் முபாரக்.
போனை புவனா எடுத்தாள்.
"ஹலோ ஆன்டி, நான் முபாரக் பேசறேன்" என்றான் முபாரக்.
"ஓ சொல்லுப்பா, என்ன மேட்ச் ஜெயிச்சுடீங்களா ரம்யா தான் பேசிக்கிட்டே இருந்தா, மேட்ச் என்ன ஆச்சுன்னு,இவ்ளோ நேரம் இங்க தான் இருந்தா, இப்போ தான் விழுப்புரத்துல அவளோட பிரென்ட் ரஜினிக்கு நாளைக்கு என்கேஜ்மென்ட்னு நைட் அவங்க வீட்ல தங்க போய்ட்டா, நாளைக்கு தான் வருவா, சரி, விஜியும் காயத்ரியும் மேட்ச் பாக்க வந்தாங்களே, கெளம்பிட்டாங்களா,யாரு பிரவீன் கார் ல கூட்டிட்டு வந்துட்டு இருக்கானா?" என்றாள் புவனா.
"இல்ல ஆன்டி, நான் தான் கூட்டிட்டு வரேன், நீங்க கொஞ்சம் ஹாட் வாட்டர் மட்டும் போட்டு வைங்க ஆன்டி" என்றான் முபாரக்.
"ஏ......ஏன், என்ன ஆச்சு?" என்றாள் சற்று பதற்றமாக.
"ஒண்ணும் இல்ல ஆன்டி, ஜஸ்ட் விஜி குளிக்க தான்" என்றான் முபாரக்.
"ஓ அப்டியா, சரி சரி" என்று போனை வைத்தாள் பவன.
"காயத்ரி, விஜி வீட்ல அவங்க அம்மா மட்டும்தான் இருக்காங்க, நீ என்ன பண்ற, உன் வீட்ல குளிச்சுட்டு வா, அதுவரைக்கும் நான் கார் ல வளவனூர் ல சுத்திட்டு இருக்கேன் விஜியோட, நீ ரெடி ஆயிட்டு எனக்கு போன் பண்ணு, அப்புறம் உன்னை கூட்டிட்டு விஜி வீட்டுக்கு போறேன், ஏன்னா இன்கேஸ் விஜி அழுதான்னா கண்ட்ரோல் பண்ண நீ வேணும்" என்றான் முபாரக்.
"சரி அண்ணா,எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு அண்ணா பிரவீன்........"அழுதாள் காயத்ரி.
"காயத்ரி, அழாத" என்றபடி முபாரக் தனது கண்கள் கலங்கி வரும் நீரை துடைத்தபடியே வண்டியை ஓட்டினான்.
கார் வளவனூரை அடைந்தது, காயத்ரியை வீட்டில் இறக்கி விட்டுவிட்டு,"வீட்ல பக்குவமா சொல்லு, பிரவீன் டெத் சொல்லு, பட் வேற எந்த ஒரு விஷயமும் சொல்லாத, விஜி பியூச்சர் அண்ட் அவளோட பேரு முக்கியம், மத்த விஷயங்கள் நமக்குள்ள இருக்கட்டும் காயத்ரி ப்ளீஸ்" என்றான் முபாரக்.
"சரி அண்ணா, நான் ரெடி ஆயிட்டு போன் பண்றேன்" என்றாள் காயத்ரி.
கார் வளவனூரை தாண்டி சிறுவந்தாடு அருகே சென்று ஓரமாக நிறுத்தப்பட்டது.
முபாரக் இறங்கினான்.
விஜியை இறங்கச்சொன்னான்.
விஜி அழுத கண்களுடன் வெளியே இறங்கி முபாரக் முகத்தில் முழிக்க முடியாமல் வெட்கி தலை குனிந்து குற்ற உணர்ச்சியில் கூனிக்குறுகி நின்றாள்.
சற்று நேரம் அமைதியாய் விஜியை பார்த்தான் முபாரக்.
"விஜி, நிமிரு, என்னை பாரு" என்றான் முபாரக்.
விஜி நிமிராமல் நின்றாள்.
"விஜி, எந்த கோவமான கேள்வியும் இல்ல, நிமிரு" என்றான் முபாரக்.
நிமிர்ந்து முபாரக்கை பார்த்தாள் விஜி.
அழுது அழுது கண்கள் முகம் எல்லாம் வீங்கி சிவந்து இருந்தன.
மனசு விட்டு கொஞ்சம் பேசலாமா விஜி, இந்த சிச்சுவேஷன் அதுக்கான சிச்சுவேஷன் இல்லன்னு எனக்கு தெரியும், ஆனா இது நமக்குள்ள மட்டும் தான் இருக்கணும். அதான், சொல்லு விஜி, நீ பிரவீனை லவ் பண்ணினது எனக்கு நாம ராகவன்பேட்டை ஆஞ்சபெயர் கோவில் ல மீட் பண்ணினப்போ தெரியும், அல்லாஹ் கி கசம், நீ பொய் சொல்ல முடியாது, நீ பிரவீனை அப்பவே லவ் பண்ண ஆரம்பிச்சுட்ட இல்லையா?" என்றான் முபாரக்.
அமைதியாய் நின்றிருந்தாள் விஜி.
"சொல்லு விஜி, உன்னோட குற்ற உணர்ச்சி உன்னோட இந்த மௌனத்தின் வழியா உன்னை நிம்மதியா வாழ விடாது, வாய தொறந்து பேசு" என்றான் முபாரக்.
அமைதியாய் நின்ற விஜியை பார்த்து, "நீ பிரவீனை உயிரா நெனச்ச இல்ல விஜி, இப்போ அது உண்மை னா, அவன் ஆத்மா சாந்தி அடைய நீ பேசி தான் ஆகணும்" என்றான் முபாரக்.
விஜி பேசத்தொடங்கினாள்,"அண்ணா, பிரவீனை என்னிக்கு பாத்தேனோ, அன்னிக்கே என் மனசுக்குள்ள ஒரு இனம் புரியாத உணர்வு, அவன் ஏதோ எனக்குன்னே இந்த உலகத்துல வந்தா மாதிரி ஒரு அசரீரி உள்ளூர சொல்லுச்சு, அவன் டிக்கெட் குடுத்துட்டு போனபிறகு, நான் வெளில வந்து அவன் போறவரைக்கும் அவனை பாத்துட்டே இருந்தேன், அதுக்கப்புறம் அவனை எப்போ பாக்கபோறேன், கடவுள் இப்படி ஒரு நபரை காட்டிவிட்டு திரும்ப எப்போ பாப்பேன்னு எந்த ஒரு அறிகுறியும் இல்லாம பண்ணிட்டாரேன்னு நெனச்சுட்டு இருந்தேன், அன்னிக்கே திருப்பி அவனை பாத்தேன், அவ்ளோ சந்தோஷமா இருந்துச்சு, என் தங்கை ரம்யா கார்ல முன்னாடி உக்காந்தத கூட என்னால ஏத்துக்க முடியாம அவ்ளோ பீல் பண்ணினேன், அவன் பேச்சும் அவன் சிரிப்பும் அவன் கேர் பண்ண விதமும் அவனை பத்தி அடிக்கடி யோசிக்க வெச்சுது, என்னோட அம்மா அன்னிக்கு ராத்திரி அவன் ஒரு மூணாவது மனுஷன், அவன்கிட்ட அப்டி டீப் ஆஹ் பேசறியேன்னு என்னை திட்டினப்போ யோசிச்சேன், ஆமாம், நான் ஏன் அவ்ளோ டீப் ஆஹ் அவன்கிட்ட பேசணும், என்னை மீறி என் மனசு ஒரு ஈர்ப்புல இருந்ததை உணர முடிஞ்சுது, அப்புறம் துணிக்கடைல பாக்கும்போது எனக்கு அவ்ளோ சந்தோசம், ஆனா அம்மா பாத்து என்னை ஏதாவது சொன்னா பரவால்ல, அவனை ஏதும் சொல்லிடக்கூடாதுன்னு நெனச்சு தான் அவன் கிட்ட கோவமா பேசி அவனை போகவெச்சேன், அவன் போனதுக்கு அப்புறம், ரம்யா கூட கேட்டா, ஏன் அப்டி பேசினேன் னு, என் பிரவீன் ஹர்ட் ஆகக்கூடாதுன்னு தான் பேசினேன் ஆனா நான் எவ்ளோ கஷ்டப்பட்டேன் னு எனக்கு மட்டும் தான் தெரியும், எல்லாத்துக்கும் மேல சுனாமி வந்தப்போ அவன் அம்மா தங்கை ரெண்டு இறந்து போனாங்க, என்னையும் என் தங்கை ரம்யாவையும் அவன் காப்பாத்தி உயிர் குடுத்தான், என் அம்மாக்கு புரிஞ்சது எனக்கு அவ்ளோ சந்தோஷமா இருந்துது, அவன் என்மேல வெச்சிருந்த கேர், அபெக்ஷன், எனக்காகவும் காயத்ரிக்காகவும் செந்தில் ப்ராப்ளேம சால்வ் பண்ணினது, நான் அவ்ளோ கோவமா பேசியும் என் அப்பாவை மாத்தினது......எனக்கு யாருமே என்மேல இவ்ளோ கேர் காட்டாத என் லைப்ல பிரவீன் தான் எனக்கு எல்லாமுமாய்ய் இருந்தான், ஒரு கட்டத்துல எனக்கு எல்லாரை விட பிரவீன் தான் முக்கியம் னு மனசு நெனைக்க ஆரம்பிச்சது, கொஞ்சம் கொஞ்சமா அவனை நான் லவ் பண்றேன் னு உணர ஆரம்பிச்சேன், அவனை ஒவ்வொரு நொடியும் மிஸ் பண்றதை புரிஞ்சுக்கிட்டேன், படிக்கும்போதும் அவன் நினைவுகள் வந்து வந்து போகும், ஆஸ்திரேலியா ட்ரெயினிங் ல கூட கான்சன்ட்ரேட் பண்ண முடியாம எப்போ பிரவீனை பாப்பேன் னு காத்திட்டிருக்கும் என் மனசு, அவனோட சின்ன சின்ன விஷயத்துல கூட ஒரு டிவைன் டச், கேர், அபெக்ஷன், லவ் நான் உணர்ந்தேன், டேவிட் ப்ரபோஸ் பண்ணும்போது என்னையும் பிரவீனையும் சேத்து வெச்சு பேசியபோது கூட என்னை மீறி என்னோட அந்த லவ் வெளிப்பட்டுச்சு. நான் எப்போ எல்லாம் ப்ரபோஸ் பண்ணனும் னு நெனச்சாலும் எனக்கு வந்த ஒரே பயம், பிரவீன் என்னை லவ் பன்ரானானு எனக்கு தெரில, நான் தப்பான பெர்செப்ஷன் ல லவ் ப்ரபோஸ் பண்ணி அது எங்க ரெண்டு பெருக்குள்ள ஒரு மிஸாண்டர்ஸ்டேண்டிங்கா ஆய்டுமானு பயம், ஏன்னா பிரவீன் லவ் பன்றானோ இல்லையோ அவன் என்கூட இருக்கணும், அவன் இல்லன்னா நான் இல்லை, அவன் பலமுறை அதை எக்ஸ்பிரஸ் பண்ணி இருக்கான், ஆனா அதுக்கான அர்த்தம் எனக்கு புரில, அவன் ரம்யா பேர்வெல் ல வேற பொண்ணுங்க கூட பேசறதை கூட தாங்கிக்க முடியாம அவ்ளோ அனீஸியா ஆனேன், அவன் என்னை முழுசா கண்ட்ரோல் பண்ணினான், கடைசியா என்னோட லவ் என்னால கண்ட்ரோல் பண்ண முடியாம என்னோட பர்த்டே அன்னிக்கு சொல்ல முடிவு பண்ணினேன், அதுக்கு ஏத்த மாதிரி பிரவீன் ஒரு பெரிய கிப்ட் பண்ணினான், தட் வாஸ் அனெக்ஸ்பெக்டட், அதுல இருந்த அந்த கிரீட்டிங் கார்ட் அதுல இருந்த வாசகங்கள், அதுக்கப்புறம் அவன் பண்ணின போன், அதுல நான் புரிஞ்சுக்கிட்டேன், அவன் எனக்கு ப்ரபோஸ் பண்ணப்போறான் னு, நானும் அதுக்கு தயார் ஆனேன், இந்த பிறந்த நாள் என் வாழ்க்கை ல ஒரு முக்கியமான நாளா இருக்கும் னு அவ்ளோ கனவுகளோடு பிரவீன் கூட போன் ல பேசிட்டு இருந்தேன், அன்னிக்கு ஈவினிங் என்னை மீட் பண்றதா சொன்னான், கண்டிப்பா தெரியும் அவன் ப்ரபோஸ் பண்ணப்போறான் னு, சோ நான் ஒரு பிளான் போட்டேன், அவன் ப்ரபோஸ் பண்ணும்போது டேவிட் அங்க இருந்தா நான் பிரவீன் லவ்வை அக்செப்ட் பண்ணும்போது அவனாவே புரிஞ்சுப்பான் என் மனசுல பிரவீன் இருக்கான் னு, சோ அதுக்கப்புறம் என்னை லவ் பண்றேன் னு டிஸ்டர்ப் பண்ண மாட்டான் னு நெனச்சேன், சோ டேவிட கால் பண்ணி எங்ககூட ஜாயின் பண்ணிக்க சொன்னேன்." என்றாள் விஜி.
முபாரக் பொறுமையாக கேட்டுக்கொண்டிருந்தான்."அப்புறம் என்ன ஆச்சு விஜி, அந்த நிமிஷம் வரைக்கும் பிரவீனை லவ் பண்ணின நீ ஏன் அப்டி சேஞ் ஆன" என்றான் முபாரக்.
"அர்ச்சனால நேர்ல சொல்லர்துக்கு முன்னாடி இப்போ போன் ல ஒருமுறை சொல்லணும் னு தோணுதுன்னு சொன்னான், அவன் ஐ லவ் யு முதல் முறை என்னிடம் சொல்லப்போகும் அந்த நொடி....அவ்ளோ சந்தோஷமா என்ன டா ன்னு கேட்டேன், டக்குனு சார்ஜ் இல்லாம என் போன் ஆப் ஆச்சு, இந்த ரம்யா அவளோட சார்ஜெர சென்னை ல விட்டுட்டு வந்து என்னோட சார்ஜரை யூஸ் பண்ணிட்டு இருந்தா, நான் போன் ஆப் ஆன கோவத்துல சத்தமா ரம்யாகிட்ட எங்க சார்ஜர் னு கேட்டேன், அதுக்கு அவ அவளோட கபோடுல இருக்குன்னு ஹால் ல இருந்து பதில் சொன்னா, நான் அந்த கபோட தொறந்து சார்ஜரை எடுத்துட்டு இருக்கும்போது அது பக்கத்துல அவளோட போன் சைலன்ட் மோட் ல வைப்ரேட் ஆட்டு இருந்துச்சு, அதுல அவளோட பிரென்ட் பூமா காலிங் னு இருந்துச்சு, நான் அதை அட்டென்ட் பண்ணி ஹலோ ன்னு சொன்னேன், அதுக்கு அன்ஹா பொண்ணு,ஹலோ எல்லாம் இருக்கட்டும் பிரவீன் கிட்ட ப்ரபோஸ் பண்ணிடுவேன் னு சொன்னியே பண்ணிட்டியானு கேட்டா,அந்த நொடி என் இதயமே நின்னுபோச்சு, எதுவும் பேச முடியாம என் நெஞ்சே வெடிச்சுடும் போல இருந்துது, இந்த சிச்சுவேஷன் நான் எதிர்பாக்கல அண்ணா, உடனே போனை கட் பண்ணிட்டேன், அவளோட மெசேஜ் எல்லாம் பாத்தேன், பூமா அண்ட் சத்யானு அவளோட பிரெண்ட்ஸ் கிட்ட அவ அனுப்பின எல்லா மெசேஜும் பிரவீனை பத்தி தான், அவனை அவ அந்த மெசேஜ்ல எக்ஸ்பிரஸ் பண்ணி இருந்த விதமும், அவ எப்படி எல்லாம் அவனை கற்பனை பண்ணி வெச்சுருக்கானு படிச்சப்போ எனக்கு ஒரு விஷயம் புரிஞ்சுது, ரம்யா....என்னை விட பிரவீனை உயிரா நெனைக்கிறானு, பிரவீனை அவ்ளோ சின்சியரா லவ் பண்ரான்னு புரிஞ்சுக்கிட்டேன், எனக்கு தலை சுத்த ஆரம்பிச்சுது, கை கால் எல்லாம் ணதுங்க ஆரம்பிச்சது, இதை எப்படி சால்வ் பண்றது, என்னை பொறுத்தவரை நான் ப்ரவீணோட ப்ரபோசலை ஏத்துக்கிட்டா ரம்யா ஹர்ட் ஆவா, பிரவீனை அவாய்ட் பண்ண என்ன பண்ணனும், ரம்யா பாவம், அவ சின்ன பொண்ணு, அவ மனசுல ஒரு காதல் தோல்வியை சொந்த அக்கா நானே எப்படி ஏற்படுத்த முடியும், என்னோட மனச திடம் ஆக்கிக்கிட்டேன், யோசிச்சேன், ப்ரவீனா என்மேல கோவப்பட்டு என்னை பிரிஞ்சு போகணும் னு முடிவு பண்ணினேன், முதல்ல என்மேல இருக்கற காதலை அவன் மனசு தூக்கி போடணும், அதுக்கு அப்புறம் உங்க எல்லார்கிட்டயும் சொல்லி அவன்கிட்ட ரம்யாவோட லவ் பத்தி சொல்லணும் னு பிளான் பண்ணினேன். இந்த நிலமைல கண்டிப்பா பிரவீன் என்னை லவ் பண்றதுல இருந்து வெளில போகமாட்டான், நான் என்ன ஹர்ட் பண்ணினாலும் அவன் மனசு இன்னும் இன்னும் காதலை அதிகமா தான் ஆகும் னு தெரியும், அதுக்கு தான், எனக்கு விருப்பம் இல்லேன்னாலும் பரவால்லன்னு ரம்யாவுக்காக என் பிரவீன் மேல வெச்சிருந்த காதலை தியாகம் செய்ய முடிவு பண்ணினேன், நான் வேற ஒரு ஆளை லவ் பண்றேன் னு சொன்னா பிரவீன் என்னை லவ் பண்றதை நிறுத்திடுவான்னு தோணுச்சு, அதுக்கு அப்புறம் உங்களபதி, கிரிக்கெட்டை பத்தி அவனோட பர்சனல் லைப் பத்தி ஹர்டிங்கா பேசினா என்மேல கோவம் வரும் னு முடிவு பண்ணினேன், மனசை திடப்படுத்திக்கிட்டேன், பிரவீன் எந்த ரியாக்ஷனுக்கும் நான் என்னை கண்ட்ரோல் பண்ணிக்கணும் னு முடிவு பண்ணினேன், ப்ரவீனுக்கு முன்னாடியும் அவன்கூட போன் ல பேசும்போதும் அவனை ஹர்ட் பண்ணினேன். ஆனா.....அவன் என்னை விட்டு போகணும் னு தான் பண்ணினேன் தவிர இந்த உலகத்தை விட்டு இல்ல அண்ணா, என்னோட ப்ரவீனுக்கும் துரோகம் பண்ணி, என்னோட காதலுக்கும் துரோகம் பண்ணி என் ரம்யாவுக்கு துரோகம் பண்ணி.......இப்போ உயிர் இருந்தும் பிணமாய் என் பிரவீனை இழந்து எல்லாரும் சுத்தி இருந்தும் அனாதையாய் நிக்கறேன் அண்ணா, இப்போ சொல்லுங்க, என் நெலமை ல இருந்து சொல்லுங்க அண்ணா, நான் பிரவீனை கொன்னது எவ்ளோ நிஜமோ அது போல என் மனசு படும் வேதனையும் நிஜம்" என்று அழுதாள் விஜி.
முபாரக் கண் கலங்கியபடி விஜியை கட்டி அணைத்துக்கொண்டான், "உன்மேல தப்பு இல்ல டா, உன்னோட எடத்துல யார் இருந்தாலும் இப்படி தான் யோசிச்சிருப்பாங்க, பட், பிரவீன் முடிவு தான் ரியலி அன்பார்ச்சுனேட், அழாத விஜி, எனக்கு நுமேல எந்த கோவமும் இல்ல, எனக்கு தெரியும், நீ ஏதோ ஒரு இக்கட்டுல இருந்து தான் இந்த முடிவு பண்ணிருக்கன்னு, ஏன்னா பிரவீன் உன்னை எவ்ளோ லவ் பண்ணினானோ அதைவிட நீ அவனை அதிகமா லவ் பண்ணினன்னு எனக்கு தெரியும், ஆனா இந்த விஷயம் நமக்குள்ள இருக்கட்டும், தயவுசெஞ்சு நீ பிரவீன் மேல வெச்சிருந்த காதலும் நீ செஞ்ச இந்த விஷயமும் உனக்கும் எனக்கும் மட்டுமே தெரிஞ்சதா இருக்கட்டும், ரம்யா, காயத்ரிக்கு எல்லாம் தெரிஞ்சா அவங்க தப்பா உன்னை இன்டெர்ப்ரெட் பண்ணிடுவாங்க, பிரவீன் மேல ப்ராமிஸ், இதை நீ யார்கிட்டயும் சொல்லிட கூடாது."என்றான் முபாரக்.
மௌனமாய் இருந்தாள் விஜி.
"ரம்யா பிரவீனை லவ் பண்ணதும், அது உனக்கு தெரிஞ்சதும், அதனால நீ லவ் பண்ணின விஷயத்தை பிரவீன் கிட்ட மறைக்க விஷயம் எல்லாம் தெரிஞ்சா ரம்யா தான் குற்ற உணர்ச்சிக்கு ஆள் ஆவா, இன்னொரு இழப்பை பாக்க நேரிடும் விஜி" என்றான் முபாரக்.
"கண்டிப்பா யார்கிட்டயும் சொல்ல மாட்டேன் அண்ணா, என் காதலும் பிரவீனின் நினைவுகளும் என் இதயத்துல மட்டும் தான் வாழும்." என்றாள் விஜி.
"ரம்யா, சின்ன பொண்ணு, இன்னும் ஒரு பொசெசிவா தான் இருப்பா, கொஞ்சநாள் ல ப்ரவீனோட டெத் அவளுக்கு மறந்து போகும், நீயும் கொஞ்சம் கொஞ்சமா மறந்து நல்ல ஒரு வாழ்க்கை தேடிக்கொ, நீ சந்தோஷமா இருந்தா தான் பிரவீன் ஆத்மா சந்தோஷப்படும். உன் சந்தோஷத்துக்காக உயிரை குடுத்தான் பிரவீன்" என்று சொல்லும்போதே காயத்ரி கால் செய்தாள்.
"அண்ணா காயத்ரி வேணாம், நான் வீட்டுக்கு போறேன், பாவம் அவ ரெஸ்ட் எடுக்கட்டும்" என்றாள் விஜி.
"சரி" என்றபடி போனை எடுத்து,"காயத்ரி, நீ வரவேணாமாம், நாளைக்கு பாக்கறேன் னு விஜி சொல்ல சொன்னா, குட் நைட்" என்றான் முபாரக்.
விஜி வீட்டிற்கு சென்றதும் விஜி முகத்தை பார்த்த புவனா ஆடிப்போனாள்,"என்ன டி இப்படி வீங்கி போய் இருக்கு முகம், என்ன ஆச்சு?" என்றாள் புவனா.
அழுதுகொண்டே அமைதியாய் நின்றாள் விஜி.
"என்ன டி, சொல்லு ஏன் அழற" என்றாள் புவனா.
"விஜி, நீ போய் குளிச்சுட்டு வாம்மா, நான் அம்மாகிட்ட சொல்றேன்" என்றான் முபாரக்.
நடைப்பிணமாக குளியலறைக்கு சென்றாள் விஜி.
"என்ன ஆச்சு முபாரக், ஏதாவது பிரச்னையா" என்றாள் புவனா.
"ஆன்டி, பதட்டப்படாதீஙக, விஜி கொஞ்சம் அப்செட்டா இருப்பா கொஞ்ச நாளைக்கு, ஏன்னா நம்ம பிரவீன் எதிர்பாராத விதமா இன்னிக்கு மேட்ச் விளையாடும்போது இறந்துபோய்ட்டான், அதை பாத்து ரொம்ப அப்செட் ஆயிருக்கா, கொஞ்ச நாள் ப்ரீயா விடுங்க" என்றான் முபாரக்.
புவனாவே சற்று கலங்கிவிட்டாள்,
"எப்படி முபாரக்" என்றாள் புவனா.
"ப்ரெய்ன் ல ரத்தக்குழாய் வெடிச்சுருச்சாம்" என்றான் முபாரக்.
விஜி குளித்துவிட்டு தனது கட்டுப்பாடில்லாமல் நடந்து வந்தாள்.
"விஜி, ஒண்ணும் கவலை படாத, ஆன்டி நீங்க கொஞ்சம் விஜியை கன்வின்ஸ் பண்ணுங்க, நான் கிளம்பறேன்" என்றபடி வெளியே வந்து காரில் சாய்ந்து ஒரு நிமிடம் தன்னை கண்ட்ரோல் செய்துகொண்டு காரை கடலூர் நோக்கி செலுத்தினான் முபாரக்.
புவனா விஜியை தனது மடியில் சாய்த்துக்கொண்டாள். விஜி அழுதபடியே "பிரவீன் பாவம் மா, சாகவேண்டிய வயசாம்மா அவனுக்கு" என்று அழுதாள்.
நீண்ட நேர ஆறுதலுக்கு பிறகு "சரி அம்மா, நான் என் ரூம் கு போறேன், நீயும் தூங்கு" என்று சொல்லிவிட்டு அறைக்கு சென்றாள் விஜி.
ரம்யா அந்த நேரம் விஜிக்கு போன் செய்தாள்,"அக்கா என்ன கடலூர் ஜெயிச்சுட்டாங்களா" என்றாள்.
"ம்ம், ஜெயிச்சுட்டாங்க ரம்மி, எப்போ வருவ?" என்றாள் விஜி.
"காலைல பர்ஸ்ட் பஸ் கு எல்லாம் வந்துருவேன் அக்கா" என்றாள் ரம்யா.
நாளை காலை ரம்யாவின் இந்த சந்தோஷ வார்த்தைகள் காணாமல் போகப்போவதை எண்ணி கலங்கியபடியே, கட்டிலில் உறங்க மனமின்றி உட்கார்ந்தாள் விஜி.
விடிந்தது....மணி ஆறை தொட்டது, ரம்யா வெளியில் வந்து காலிங் பெல்லை அழுத்தினாள். புவனா கதவை திறந்தாள்.
உள்ளே வந்து நேராக அவர்களின் அறைக்கு சென்று அங்கே உட்கார்ந்திருந்த விஜய்யிடம் பேசியபடியே ஆடைகளை மாற்ற தொடங்கினாள் ரம்யா,"என்ன அக்கா, தூங்கலையா, வின் பண்ணின குஷி ல எல்லாரும் நைட் புல்லா மெசேஜ் பண்ணிட்டே இருந்தாங்களா, இப்டி தலைவிரி கோலமா உக்காந்துட்டு இருக்க" என்றாள் ரம்யா.
விஜி அமைதியாய் இருந்தாள்.
"என்ன அக்கா, பேசாம இருக்க, என்ன....ஏதாவது சொல்லு, மேட்ச் எப்படி போச்சு, நேத்து எல்லாரும் உன்னை விழுந்து விழுந்து கவனிச்சிருப்பாங்களே......" என்றாள் ரம்யா.
விஜி மௌனமாய் இருந்தாள்.
"இப்போ பேசப்போறியா இல்லையா" என்றபடி விஜியை தொட்டாள் ரம்யா. அசைவுகள் இல்லாததால் "அக்கா அக்கா என்னக்கா என்ன ஆச்சு" என்று விஜியை உலுக்கினாள் ரம்யா. அவள் கையில் அழுத்தி எதையோ மூடி இருப்பது தெரிந்தது. அது "விஜி-பிரவீன்" என்று பொறிக்கப்பட்ட அந்த டாலர்.
பிரவீன்-விஜி காதலுக்கு உயிர் இருந்தது. ஆனால் விஜி உயிர் இல்லாமல் சடலமாக இருந்தாள்................
"அம்மா ..................விஜி அக்கா................." என்று கத்தினாள் ரம்யா.
அடுத்தடுத்த நாட்களில் பிரவீனின் வீடு பூட்டியது பூட்டியதாகவே இருந்தது. தன்னுள் ப்ரவீனும் விஜியும் குடும்பமாக சந்தோஷ சிரிப்பலைகளுடன் வாழ்வார்கள் என்று எண்ணி இருந்த அறைகள் ஒட்டடை படிந்து யாரும் வாழாத பாழ் வீடாய் போனது.
தனியாக பணிக்கு செல்லும் காயத்ரி, தனது நிறுவனத்தில் விஜி உட்கார்ந்து வேலை செய்த இடத்தில அமர்ந்து வேலை தற்போது வேலை செய்து கொண்டிருந்த வட இந்திய பெண் மான்ஸி.
விஜியின் நினைவுகளை சுமந்து புழக்கமின்றி அழுகைக்கு மட்டுமே சொந்தமாய்ப்போன போன விஜியின் அறை. அக்கா என்று அழைக்க முடியாமலும் காதலித்த பிரவீன் ஏன் இறந்தான் என்று கூட தெரியாமலும் விஜியின் மரணத்திற்கான காரணம் தெரியாமலும் தனது தோற்றுப்போன காதலை தனக்குள்ளே வைத்து வாழ்ந்துகொண்டிருக்கும் ரம்யா.....இவை அனைத்திற்கும் மேலாக விஜியை சுமக்க முடியாத துரதிஷ்டசாலியான பிரவீன் அளித்த புதிய ஸ்கூட்டி பெப்.........
காலம் அனைத்தையும் ஆற்ற முயற்சி செய்துகொண்டிருந்தது.
விஜி புகைப்படமாக சிரித்துக்கொண்டிருந்தாள்.
பிரவீன் - விஜி இருவரும் இந்த கதையில் மரணம் அடைந்தாலும் இந்த பாத்திரங்களின் மனங்களில் மட்டும் அல்ல, நமது மனங்களிலும் என்றென்றும் வாழ்வார்கள் என்று நம்புகிறேன்.
எழுத்தும் கற்பனையும்:உங்கள் ஜெயராமன்.
..............................முற்றும்.................................