மூட நம்பிக்கை
என் தங்கை சாந்தியை நான் கல்யாணம் செய்து வைத்தபோது அந்த குடும்பம் இவ்வளவு மூட
நம்பிக்கை கோமடவர்கள் என்று எனக்கு தெரியாமல் போச்சு.
என் தங்கையும் கணவர் திங்கட்கிழமைகளில் அலுவலகம் போவது என்றால் வீட்டை விட்டு
ஏழேகால் மணிக்கே கிளம்பி விடுவார்.என் என்றால் அன்று ராகு காலம் 7-30 இல் 9-௦௦ வரை
இருக்குதாம்.
என் தங்கையின் கணவர் ஞாயிற்று கிழமைகளை சாயங்கால 'ஷோவுக்கு'' அழைத்து
போவதாய் இருந்தால் அவர் என் தங்கையை அழைத்துக் கொண்டு வீட்டை விட்டு நாலேகால்
மணிக்கே கிளம்பிப் போய் விடுவார்.ஏன் என்றால் அன்று ராகு காலம் 4-30 இல் 6-00 மணிவரை
இருக்குதாம்.படம் பார்த்து விட்டு அவர் என் தங்கையை வீட்டுக்கு அழைத்து வர மணி பத்தரைக்கு
மேல் ஆகி விடும். இதற்குள் என் தங்கைக்கு பசி அதிகமாகி பசி பெருங்குடலை சாப்பிட்டு விட்டு சிறு
குடலை சாப்பிட வந்து விடும்.
என் தங்கைக்கு ஒரு பெண் குழந்தை பிறந்து அதற்கு ரமா என்று பேரை வைத்து தாத்தா பாட்டி
எல்லோரும் மிக மிக செல்லமாக வளர்த்து வந்தார்கள்.
ரமா எட்டாவது படித்து வந்தாள்
ஞாயிற்று கிழமைகளில் சாந்தி அவள் கணவர் மாமனார் மாமியார் நால்வரும் காரம் போர்ட்
ஆடுவது வழக்கம் . பாதி ஆட்டத்தில் ரமா எழுத்து போய் "பாத் ரூம் "போய் சிட்டு வெளியே வரும்
பொது " அப்பா அப்பா பாத் ரூமில் நான் இருந்த பொது என் தலையிலே ஒரு பல்லி கத்திக் கொண்டே
வெளியே வந்தாள்
உடனே என் தங்கையின் மாமனார் பூஜை அறையில்இருந்த பஞ்சாங்கத்தை எடுத்து பிரித்து
பார்த்து " ராமு,பல்லி தலையிலே விழுந்தா மரண பயம் என்று போட்டு இருக்கு. அதனால இனிமே
நாம ரமாவை பள்ளிக்கூடம் அனுப்ப வேண்டாம்.நானும் மரகதமும் சாந்தியை வீட்டிலே நீ ஆபிஸ்
விட்டு வீட்டுக்கு வரும் வரையிலே ஜாக்கிரதையா பாத்துக்கிறோம்" என்று சொல்லி ஆட்டத்தை
முழுக்க ஆடி விட்டு எழுந்து கொண்டார்.
அடுத்த நாள் முதல் ராமா பள்ளி கூடம் போகாமல் வீட்டிலேயே இருந்து வந்தாள்
நான் ' இது என்ன கொடுமை. படிக்கிற வயசிலே இப்படி ரமா வீட்டிலே இருந்து வராளே . பள்ளி
கூடத்துக்கு போக வேண்டாமா. ஒரு பல்லி தலையிலே விழுந்தா அதுக்கு பயந்து கிட்டு படிக்காம
இருப்பாங்களா' என்று நினைத்து மிகவு வருத்தப் பட்டு கொண்டு இருந்தேன்.
நான் யோஜனை பண்ணினேன்.இதற்கு ஒரு வழி கண்டு பிடிக்க வேண்டும் என்று நினைத்து யாரும்
இல்லாத போது பூஜை லமாரியை திறந்து மாமனார் பார்க்கும் பஞ்சாங்கத்தை பிரித்து பார்த்தேன்.என்
மாமனார் சொன்னது போலவே ""பல்லி விழும் பலனில்"" பல்லி தலையில் விழுந்தால் மரண பயம்
என்று போட்டு இருந்தது.சரி உடம்பிலே மீதி இடங்களிலே பல்லி விழுந்தா என்ன பலன் என்று பார்க்க
ஆரம்பித்தேன். வலது கையிலே பல்லி விழுந்தா " தீர்காயுசு "" என்று போட்டு இருந்தது.எனக்கு
சந்தோஷம் தாங்கவில்லை.நான் [பஞ்சாங்கத்தை பூஜை அறையிலே வைத்து விட்டு என் வேலைகளை
கவனிக்க ஆரம்பித்தேன்.
அன்று ஞாயிற்று கிழமை . நான் ரமாவை தனியா அழைச்சு " ரமா, இன்னைக்கு நீங்க எல்லோரும்
மத்தியானம் காரம் போர்ட் ஆடி கிட்டு இருக்கு போது அன்னிக்கு மாதிரி நீ பாத் ரூம் போய்
வா.வெளியே வரும் போது " அப்பா, அப்பா, அந்த பல்லி இப்போ என் வலது கை மேலே விழுந்தது"
என்று கத்தி கிட்டு வா" என்றுசொன்னேன்.அதுக்கு உடனே ரமா " ஏம்மா நீ தான் பொய்யே சொல்ல
கூடாதுன்னு சொல்லி இருக்கே இப்போ நீயே போய் சொல்ல சொல்றயே" என்று கேட்டாள். நான்
அவளிடம் மெதுவாக " ஆமாம் சொல்லி இருக்கேன். ஆனா இன்னைக்கு மட்டும் எனக்காக இந்த
பொய்யை கொஞ்சம் சொல்லு ரமா" என்று அவள் கையை பிடித்து கெஞ்சினேன்.அவளும் உடனே
சரிம்மா, உனக்காக நான் இது பொய்யை சொல்றேன்" என்று சொல்லி விட்டு போனாள்.
அன்று மத்தியானம் காரம் போர்ட் ஆட்டத்தின் நடுவில் ரமா எழுந்து பாத் ரூம் போனாள். நான்
சொன்னது போலவே அவள் பாத் ரூமை விட்டு வெளியே வரும் போது " அப்பா அப்பா அந்த பல்லி
இப்போ என் வலது கை மேலே விழுந்திச்சு" என்று கத்திக் கொண்டே வந்தாள். உடனே என் மாமனார்
பூஜை அரை அலமாரியைத் திறந்து பஞ்சாங்கத்தை பிரித்து பார்த்தார்.அவருக்கு சந்தோஷம்
தாங்கவில்லை.சந்தோஷத்தில் " ராமு, ராமு, நம்ப ரமாவுக்கு மரண பயம் போயிடிச்சு .வலது
கையிலே பல்லி விழுந்தா "தீர்காயுசு" ன்னு போட்டு இருக்கு.அதன்னால்லே ராம்வி நாம தைரியமா
பள்ளிக்கு அனுப்பலாம் " என்று சொன்னார்.
என் தங்கை கணவரும் " அப்படியாப்பா. நாம ராமாவை இனிமே பள்ளிக்கு அனுப்பி படிக்க
வைக்கலாம் என்று சந்தோஷத்தில் கத்தினார்.
அன்று சாயங்காலம் என் தங்கை புருஷன் அப்பா அம்மாவோடு கோவிலுக்குப் போனார்கள். ரமா
தனக்கு Home Work என்று சொல்லி விட்டு தன கணக்கு நோட்டை எடுத்து வைத்துக் கொண்டு பள்ளி
கணக்குகளை போட ஆரம்பித்தாள். அப்பா தாத்தா பாட்டி கோவிலுக்கு போன பிறகு " அம்மா நீ ரொம்ப
""க்ரேட்ம்மா"". அப்பா தாத்தா பாக்கிற பஞ்சாக்ககத்தை வச்சே அவங்க மனசை மாத்திட்டேம்மா. நான்
சொன்ன இந்த ஒரு பொய்யால் என்னால் மறுபடியும் பள்ளிக்கு போக முடிஞ்சதும்மா" என்று சொல்லி
சந்தோஷப பட்டாள்.
நான் ரமா கையை பிடித்து அவளுக்கு என் நன்றியை சொன்னேன்.அந்த கடவுளுக்கு என் நன்றியை
மனதார சொன்னேன்.