போர்

போர்
கை கால் ஒடிந்து
தலை முகம் சிதறி
குருதி குளமாய் ஆகி
உயிர் பல இழந்து
போர்
போர்
வீரம் மெய்ப்பிக்க
தீரம் திறம்பட
பயம் பயந்து ஓட
எதிரி நடு நடுக்க
போர்
போர்
தான் வாழ
காலை பிடிப்பான் கோழை
வம்சம் வாழ
வாளை பிடித்தோம்
போர்
போர்
சரண் அடைந்தால்
அவன் சாணி
அடங்காதவனே
வீர முனி
போர்
போர்
எத்தனை பேர் வந்தாலும்
யானை குதிரை
படை என்றாலும்
எதிரி பீரங்கி கொண்டாலும்
பின் வாங்கது
நல்ல மானம்
போர்
போர்
வரலாறு சொல்லும்
வரலாறு
வரும் தலை முறைக்கு
வீரம்
கொண்டு செல்லும்
போர்