நீ நான் நிலவு காதல்

இன்றோடு முடிகிறது
நம் காவிய காதல்
பிடித்துத்தான் காதலித்தோம்
காதல்
நமக்கே பிரச்னை என்பதால்
பிரிகிறோம்
என்னின்
பணம் போதவில்லை என நீ
உன்னின்
குணம் சரியில்லை என நான்
உன் குடும்பத்தை
பிடிக்கவில்லை எனக்கு
என் நண்பர் குழுவை
வெறுக்கிறாய் நீ
நிலவு சாட்சியாக
அன்று நான் சொன்ன காதலை
நிலவு சாட்சியாக
இன்று நானே கொல்ல போகிறேன்
கைபேசியில்
இருந்த நம் செல்பியை
சேதம் செய்துவிட்டேன்
நீ கொடுத்த பரிசையெல்லாம்
திருப்பி கொடுத்துவிட்டேன்
உனக்கு செலவு
செய்த பணத்தை எல்லாம்
கடன் தள்ளுபடியாக்கி விட்டேன்
என்னின்
முதல் முத்ததையும்
வரம்பு மீறி
உன் பெண்மையை
நான் கொண்டதையும்
கனவென மறக்க
நீ தயாராகி விட்டாய்
உன்னை
தளர்த்திட நானும்
சரி சொல்லிவிட்டேன்
இனிமேல்
பிணமாய் வாழ்வதற்காக
இன்று இறக்கிறோம்
நீ நான் நிலவு காதல்